ப்ரத்யக்ஷ நிரூபணம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரு கொட்டகையில் மேற்கூரையிலுள்ள துவாரம் வழியாக வரும் சூரிய கிரணம் ஓரிடத்தில் படுகிறது. அதே கிரணம் அடுத்த மாஸம் எங்கே படும் என்று கேட்டால் நமக்குத் தெரியாது. ஜ்யோதிஷ சாஸ்திரத்தில் சொல்லியுள்ள கணனங்களைச் செய்தால் தெரியும். பழைய காலத்தில் ஒரு முத்தைத் தொங்கவிட்டு, இன்ன காலத்தில் இன்ன இடத்தில் அதனுடைய நிழல் விழும் என்று ஸரியாகக் கோடு போட்டுக் காண்பித்தால், அப்படி காண்பித்தவர்களுக்கு அரசர்கள் உயர்ந்த சம்மானங்களைச் செய்து வந்தனர். மற்ற சாஸ்திரங்களிலெல்லாம் வாக்கியார்த்தம் செய்து வாதத்தில் ஜயித்தே சம்மானம் பெறுவார்கள். ஜ்யோதிஷ சாஸ்திரத்திலோ பிரத்யக்ஷமாகக் காட்டி சம்மானம் பெறவேண்டும். அதில் ஏமாற்ற முடியாது. அதற்கு சூரிய சந்திரர்களே சாக்ஷி.

ப்ரத்யக்ஷம் ஜ்யோதிஷம் சாஸ்த்ரம்

 

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is மூடநம்பிக்கையல்ல ; ஆதார பூர்வமான உண்மைகளே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  கல்பம் : வேதத்தின் கை
Next