ஸ்ரீசங்கரரின் கால நிர்ணயம் – மேற்படி கருத்துக்கு மாற்றுக் கருத்து : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

இதை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவதற்கில்லை. ரொம்பவும் பால்யத்திலேயே பட்டத்துக்கு வந்து, அந்த ஆதி காலத்தில் நல்ல யோக நியமங்களோடு வாழ்ந்தவர்கள் புருஷாயுஸ் என்கிற 120 வருஷம் ஜீவித்திருந்தால்கூட அதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமில்லை. அதனால் 80-90-100 வருஷம் என்பது மிகைப்படுத்தினதாக இருக்க வேண்டியதில்லை. நிஜமாகவே இருக்கும். நானே “போவேனா பார்!” என்று 55 வருஷமாக ஸ்வாமிகளாக உட்கார்ந்திருக்கவில்லையா1? ஆனபடியால் அந்தப் பூர்வாசார்யார்களின் பீடாதிபத்ய காலத்தில் கத்திரிக்கோல் போடத் தேவையில்லை!


1 1963-ல் கூறியது. தற்போது (1989) நம் பாக்யவசமாக ஸ்ரீசரணர்களது பீடாதிபத்யத்தின் 83-வது ஆண்டில் இருக்கிறோம். தொடக்க கால ஆசார்யர்களும் இதே போல நெடுங்காலம் பட்டம் வகித்திருக்கலாம் அல்லவா?

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 21. கி.மு. முதல் நூற்றாண்டு என்னும் கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  23. த்வாரகா ஸ்ரீமடத்தின் சான்று
Next