கொங்கலர்ந்த

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

கொங்கலர்ந்த

திருவேங்கடம்

திருவேங்கடம்- திருமலை-திருப்பதி மலை. திருமலைக்குச் செல்ல நினைப்பதும், செல்வதும் பாக்கியம். அங்கு சென்று ஸ்ரீநிவாசனை ஸேவிப்பது பெரும் பாக்கியம்.

இங்கு ஸ்ரீநிவாசன் அடியார்கள் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்த உதவுகிறார்.

தென்னாடும் வடநாடும் தொழநிற்கும் பெருமான் இவர். இவரைக் கண்டு அஞ்சலி செய்வதற்கே பலமணி நேரம் காத்திருக்கவேண்டும். ஆழ்வார் இம்மலையின் சிறப்பை ஈண்டுக் கூறுகிறார்.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

மனமே வேங்கடம் அடை

1018. கொங்க லர்ந்த மலர்க்கு ருந்த

மொசித்த கோவல னெம்பிரான,

சங்கு தங்கு தடங்க டல்துயில்

கொண்ட தாமரைக் கண்ணினன்,

பொங்கு புள்ளினை வாய்பி ளந்தபு

தாணர் தம்மிடம், பொங்குநீர்

செங்க யல்திளைக் கும்சு னைத்திரு

வேங்க டமடை நெஞ்சமே

யாவரும் வணங்கும் இடம் வேங்கடம்

1019. பள்ளி யாவது பாற்க டலரங்

கம்இ ரங்கவன் பேய்முலை,

பிள்ளை யாயுயி ருண்ட வெந்தைபி

ரான வன்பெரு குமிடம்,

வெள்ளி யான்கரி யான்ம ணிநிற

வண்ண னென்றெண்ணி, நாடொறும்

தெள்ளி யார்வணங் கும்ம லைத்திரு

வேங்க டமடை நெஞ்சமே

கண்ணபிரானே வேங்கடத்தில் உள்ளான்

1020. நின்ற மாமரு திற்று வீழந

டந்த நின்மலன் நேமியான்,

என்றும் வானவர் கைதொ ழுமிணைத்

தாம ரையடி யெம்பிரான்,

கன்றி மாரி பொழிந்தி டக்கடி

தாநி ரைக்கிடர் நீக்குவான்,

சென்று குன்ற மெடுத்த வன்திரு

வேங்க டமடை நெஞ்சமே

பார்த்தசாரதியே வேங்கடத்தில் நிற்பவன்

1021. பார்த்தற் காயன்று பார தங்கைசெய்

திட்டு வென்ற பரஞ்சுடர்,

கோத்தங் காயர்தம் பாடி யில்குர

வைபி ணைந்தஎம் கோவலன்,

ஏத்து வார்தம் மனத்துள் ளான்இட

வெந்தை மேவிய வெம்பிரான்,

தீர்த்த நீர்த்தடஞ் சோலை சூழ்திரு

வேங்க டமடை நெஞ்சமே

மனமே வேங்கடம் சேர்ந்து துயரம் நீங்கு

1022. வண்கை யானவு ணர்க்கு நாயகன்

வேள்வி யில்சென்று மாணியாய்,

மண்கை யாலிரந் தான்ம ராமர

மேழு மெய்த வலத்தினான்,

எண்கை யானிம யத்துள் ளானிருஞ்

சோலை மேவிய எம்பிரான்,

திண்கைம் மாதுயர் தீர்த்த வன்திரு

வேங்க டமடை நெஞ்சமே

நரசிம்மனே வேங்கடத்தில் நிற்பவன்

1023. எண்டி சைகளு மேழு லகமும்

வாங்கிப் பொன்வயிற் றில்பெற்து,

பண்டொ ராலிலைப் பள்ளி கொண்டவன்

பான்ம திக்கிடர் தீர்த்தவன்,

ஓண்டி றலவு ணன்னு ரத்துகிர்

வைத்த வனொள்ளெ யிற்றொடு,

திண்டி றலரி யாய வன்திரு

வேங்க டமடை நெஞ்சமே.

எல்லாம் ஆணவன் தங்குமிடம் வேங்கடம்

1024. பாரு நீரெரி காற்றி னோடா

காச மமிவை யாயினான்,

பேரு மாயிரம் பேச நின்றபி

றப்பி லிபெரு குமிடம்,

காரும் வார்பனி நீள்வி சும்பிடைச்

சோரு மாமுகில் தோய்தர,

சேரும் வார்பொழில் சூழெ ழில்திரு

வேங்க டமடை நெஞ்சமே

அலர்மேல் மங்கை மணாளனின் இடம் வேங்கடம்

1025. அம்ப ரமனல் கால்நி லம்சல

மாகி நின்றஅ மரர்கோன்

வம்பு லாமலர் மேல்ம லிமட

மங்கை தன்கொழு நனவன்,

கொம்பி னன்னவி டைம டக்குற

மாதர் நீளித ணந்தொறும்,

செம்பு னமவை காவல் கொள்திரு

வேன்க டமடை நெஞ்சமே.

மண்ணுலகம் விண்ணுலகும் ஆள்வர்

1027. செங்க யல்திளைக் குஞ்சு னைத்திரு

வேங்க டத்துறை செல்வனை,

மங்கை யர்தலை வன்க லிகன்றி

வண்ட மிழ்ச்செஞ்சொல் மாலைகள்,

சங்கை யின்றித் தரித்து ரைக்கவல்

லார்கள் தஞ்சம் தாகவே,

வங்க மாகடல் வையங் காவலர்

ஆகி வானுல காள்வரே

அடிவரவு - கொங்கு பள்ளி நின்ற பார்த்தன் வண்கை எண்டிசை பார் அம்பரம் பேசுமின் செங்கயல் - தாயே.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is அங்கண் ஞாலம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  தாயே தந்தை
Next