தாயே தந்தை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

முதற்பத்து

தாயே தந்தை

திருவேங்கடம்

ஆழ்வார் தமதுநெஞ்சை இசையவைத்தார். திருவேங்கட முடையானை ஸேவிக்க மலைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், ஆழ்வார் எதிர்பார்த்தபடி ஸ்ரீநிவாசன் ஆழ்வாரை எதிர் கொண்டு அழைக்கவில்லை கைங்கர்யத்தில் ஈடுவடுத்திக்கொள்ளவில்லை. ஆழ்வாருக்கு வருத்தம்.

'நான் பாவமே செய்து வளர்ந்துள்ளேன். அதற்காக வருந்தி உன்னிடம் வந்திருக்கிறேன். c சர்வரக்ஷகன். பிராட்டியும் அருகிலிருக்கிறாள். நான் செய்த குற்றங்களைப் பொறுத்து என்னை ஏற்றுக்கொள்' என்கிறார் ஆழ்வார்.

கலிநிலைத்துறை

வேங்கடவா என்னை ஆட்கொள்

1028. தாயே தந்தையென்றும்

தாரமேகிளை மக்களென்றும்.

நோயே பட்டொழிந்தேன்

நுனைக்காண்பதோ ராசையினால்,

வேயேய் பூம்பொழில்சூழ்

விரையார்திரு வேங்கடவா,

நாயேன் வந்தடைந்தேன்

நல்கியாளென்னைக் கொண்டருளே.

பாவம் செய்தேன் எனினும் பொறுத்து ஆட்கொள்

1029. மானேய் கண்மடவார்

மயக்கிற்பட்டு, மாநிலத்து

நானே நானாவித

நரகம்புகும் பாவஞ்செய்தேன்,

தேனேய் பூம்பொழில்சூழ்

திருவேங்கட மாமலை,என்

அப்பா வந்தடைந்தேன்

அடியேனையாட் கொண்டருளே.

துன்பத்தினால் உடல் தளர்ந்தவன் என்னை ஆட்கொள்

1033. மண்ணாய் நீரெரிகால்

மஞ்சுலாவுமா காசமுமாம்

புண்ணா ராக்கைதன்னுள்

புலம்தித்தளர்ந் தெய்த்தொழிந்தேன்,

விண்ணார் நீள்சிகர

விரையார்திரு வேங்கடவா,

அண்ணா வந்தடைந்தேன்

அடியேனையாட் கொண்டருளே.

சிறுபிள்ளைத்தனம் உள்ளவன் என்னை ஆட்கொள்

1034. தெரியேன் பாலகனாய்ப்

பலதீமைகள் செய்துமிட்டேன்,

பெரியே னாயினபின்

பிறர்க்கேயுழைத் தேழையானேன்,

கரிசேர் பூம்பொழில்சூழ்

கனமாமலை வேங்கடவா,

அரியே வந்தடைந்தேன்

அடியேனையாட் கொண்டருளே.

உன்னைக் காண்பதற்காகவே இப்பிறப்பை ஏற்றேன்

1035. நோற்றேன் பல்பிறவி

நுனைக்காண்பதோ ராசையினால்,

ஏற்றேன் இப்பிறப்பே

இடருற்றன னெம்பெருமான்,

கோற்றேன் பாய்ந்தொழுகும்

குளிர்சோலைசூழ் வேங்கடவா,

ஆற்றேன் வந்தடைந்தேன்

அடியேனையாட் கொண்டருளே.

உன்னிடம் பற்றுக் கொள்ளாதவன் எனினும் ஆட்கொள்

1036. பற்றே லொன்றுமிலேன்

பாவமேசெய்து பாவியானேன்,

மற்றே லொன்றறியேன்

மாயனே எங்கள் மாதவனே,

கற்றேன் பாய்ந்தொழுகும்

கமலச்சுனை வேங்கடவா,

அற்றேன் வந்தடைந்தேன்

அடியேனையாட் கொண்டருளே.

பாவங்கள் பறந்துவிடும்

1037. கண்ணா யேழுலகுக்

குயிராயவெங் கார்வண்ணனை,

விண்ணோர் தாம்பரவும்,

பொழில்வேங்கட வேதியனை,

திண்ணார் மாடங்கள்சூழ்

திருமங்கையர் கோன்கலியன்,

பண்ணார் பாடல்பத்தும்

பயில்வார்க்கில்லை பாவங்களே.

அடிவரவு - தாயே மான் கொன்றேன் குலம் எப்பாவம் மண் தெரியேன் நோற்றேன் பற்றேல் கண்ணாய் - கண்ணார்.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கொங்கலர்ந்த
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  கண்ணார் கடல்சூழ்
Next