வானவர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

வானவர்

திருவேங்கடம்

நெஞ்சே c தீய வழிகளில் சென்று அவதிப்படாமல் திருவேங்கடமுடையானை அடைந்து தொண்டு செய்யும் பேறு பெற்றாயே உன்னைப் போன்ற பாக்கியசாலிகள் எவருளர்?'என்று ஆழ்வார் தம் நெஞ்சைப் புகழ்கிறார்.

ஆசிரியத்துறை

அருள்பருள்ளத்தில் உறைபவன் வேங்கடவன்

1048. வானவர் தங்கள் சிந்தை போலஎன்

நெஞ்சமே இனிதுவந்து, மாதவ

மானவர் தங்கள் சிந்தை யமர்ந்துறை கின்ற வெந்தை,

கானவரிடு காரகிற்புகை யோங்கு வேங்கடம் மேவி, மாண்குறள்

ஆன அந்தனற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே

மனமே வேங்கடவனக்கே அடிமை செய்

1049. உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன்

உகந்தவர் தம்மை, மண்மிசைப்

பிறவி யேகெடுப் பானது கண்டேன் நெஞ்ச மென்பாய்,

குறவர் மாதர்க ளோடு வண்டு

குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,

அறவ நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாளே.

மனமே வேங்கடவனை நினைக்கத் தொடங்கிவிட்டாயே

1050. இண்டை யாயின கொண்டு தொண்டர்கள்

ஏத்து வாருற வோடும், வானிடைக்

கொண்டு போயிடவு மதுகண்டென் நெஞ்ச மென்பாய்,

வண்டு வாழ்வட வேங்கடமலை

கோயில் கொண்டத னோடும், மீமிசை

அண்ட மாண்டிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.

வேங்கடவனை நினை வைகுந்தம் கிடைக்கும்

1051. பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே

பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை

மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்கு மெந்தை,

கோவி நாயகன் கொண்டலுந்துயர்

வேங்க டமலை யாண்டு, வானவர்

ஆவி யாயிருப் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே

எங்கும் செல்லாதே வேங்கடவனையே சேர்

1052. பொங்கு போதியும் பிண்டி யுமுடைப்

புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,

தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்ச மென்பாய்,

எங்கும் வானவர் தான வர்நிறைந்

தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,

அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

தேவாதி தேவனக்கே அடிமையாகு

1053. துவரி யாடையர் மட்டை யர்சமண்

தொண்டர் கள்மண்டி யுண்டு பின்னரும்,

தமரும் தாங்களு மேத டிக்கஎன் நெஞ்சமென்பாய்,

கவரி மாக்கணம் சேரும் வேங்கடம்

கோயில் கொண்டகண் ணார்வி சும்பிடை,

அமர நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

வேங்கடத்தே நிற்பவனைச் சரணடை

1054. தருக்கி னால்சமண் செய்து சோறுதண்

தயிரி னாலதிர ளை, I டற்றிடை

நெருக்கு வார்அலக் கணது கண்டென் நெஞ்ச மென்பாய்,

மருட்கள் வண்டுகள் பாடும் வேங்கடம்

கோயில் கொண்டத னோடும், வானிடை

அருக்கன் மேவிநிற் பாற்கடி மைத்தொழில் பூண்டாயே.

ஆயர் நாயகற்கு அடிமை செய்

1055. சேய னணியன் சிறியன் பெரிய னென்பது

சிலர்பேசக் கேட்டிருந்

தே,என் னெஞ்சமென் பாய்எனக் கொன்று கொல்லாதே,

வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி

வேங்க டமலை கோயில் மேவிய,

ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

வேங்கடக் கூத்தனக்கு அடிமை செய்

1056. கூடி யாடி யுரைத்ததே யுரைத்தாய்என்

னெஞ்சமென் பாய் துணிந்துகேள்,

பாடி யாடிப் பலரும் பணிந்தேத்திக் காண்கிலார்,

ஆடு தாமரை யோனு மீசனும்

அமரர் கோனும்நின் றேத்தும்,வேங்கடத்து

ஆடு கூத்தனுக் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

இப்பாடல்களைப் பாடுவோர் தேவர் ஆவர்

1057. மின்னு மாமுகில் மேவு தண்திரு

வேங்க டமலை கோயில் மேவிய,

அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை,

கன்னி மாமதிள் மங்கை யர்கலி

கன்றி யின்தமி ழாலு ரைத்த,இம்

மன்னு பாடல்வல் லார்க்கிட மாகும் வானுலகே.

அடிவரவு - வானவர் உறவு இண்டை பாவி பொங்கு துவரி தருக்கினால் சேயன் கூடி மின்னு - காசையாடை.


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is கண்ணார் கடல்சூழ்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  காசையாடை
Next