அன்றாயர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

பெரிய திருமொழி

இரண்டாம் பத்து

அன்றாயர்

திருநீர் மலை

இப்பகுதி திருநீர்மலை எம்பெருமானைக் குறிக்கிறது. மலையைச் சுற்றி நீர் அரணாக அமைந்துள்ளபடியால், இவ்வூரிலுள்ள மலை நீர்மலையாயிற்று. மலையின் பெயரே ஊருக்கும் ஏற்பட்டது. இங்கிருக்கும் பகவானுக்கு 'நீர்வண்ணன்' என்று திருநாமம்.

நாச்சியார் கோவில் என்ற ஊருக்குச் சென்றால், நின்ற திருக்கோலத்தில் பகவானைச் சேவிக்கலாம் திருவாலிக்குச் சென்றால் உட்கார்ந்திருக்கும் பெருமாளைச் சேவிக்கலாம். திருக்கோவலூரில் உலகளந்த திருக்கோலத்தில் சேவிக்கலாம். இவ்வூரில் இந்த நால்வகைத் திருக்கோலத்துடன் பெருமாளைச் சேவிக்கலாம். இவ்வூரிலுள்ள தாயாரக்கு 'அணிமாமலர் மங்கை' என்று திருநாமம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நால்வகைத் திருக்கோலங் கொண்டவன் இடம்

1078. அன்றாயர்கு லக்கொடி யோடணிமா

மலர்மங்கைய டன்பள M, அவுணர்க்

கென்றான மிரக்கமி லாதவனுக்

குறையுமிட மாவது, இரும்பொழில்சூழ்

நன்றாயபு னல்நறை யூர்திருவா

லிகுடந்தை தடந்திகழ் கோவல்நகர்,

நின்றானிருந் தான்கிடந் தான்நடந்தாற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே

வாமனனாகவும் திரிவிக்கிரமனாகவும் ஆனவன் இடம்

1079. காண்டாவன மென்பதோர் காடமரர்க்

கரையனது கண்டவன் நிற்க.முனே

மூண்டாரழ லுண்ணமு னிந்ததுவும்

அதுவன்றியும் முன்னுல கம்பொறைதீர்த்

தாண்டான், அவு ணனவன் மார்வகலம்

உகிரால்வகி ராகமு னிந்து, அரியாய்

நீண்டான்குற ளாகிநி மிர்ந்தவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே

சக்கரத்தால் சூரியனை மறைத்தவன் இடம்

1080. அலமன்னு மடல்சுரி சங்கமெடுத்

தடலாழியி னாலணி யாருருவின்,

புலமன்னு வடம்புனை கொங்கையினாள்

பொறைதீரமு னாளடு வாளமரில்,

பலமன்னர் படச்சுட ராழியினைப்

பகலோன்மறை யப்பணி கொண்டு, அணி சேர்

நிலமன்னனு மாயுல காண்டவனக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

திரெனபதியின் மானம் காத்தவன் இடம்

1081. தாங்காததோ ராளரி யாயவுணன்

றனைவீட முனிந்தவ னாலமரும்.

பூங்கோதையர் பொங்கெரி மூழ்கவிளைத்

ததுவன்றியும் வென்றிகொள் வாளமரில்,

பாங்காகமுன் ஐவரோ டன்பளவிப்

பதிற்றைந்திரட் டிப்படை வேந்தர்பட,

நீங்காச்செரு வில்நிறை காத்தவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

இராவணன் முடிபத்தும் அறுத்தவன் மலை

1082. மாலுங்கட லாரம லைக்குவடிட்

டணைகட்டி வரம்புரு வ,மதிசேர்

கோலமதி ளாயவி லங்கைகெடப்

படைதொட்டொரு காலம ரிலதிர,

காலமிது வென்றயன் வாளியினால்

கதிர்நீண்முடி பத்து மறுத்தமரும்,

நீலமுகில் வண்ணனெ மக்கிறைவற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

நெடுமாலுக்கு இடம் திருநீர்மலை

1083. பாராருல கும்பனி மால்வரையும்

கடலும்சுட ருமிவை யுண்டும்,'கனக்

காராª 'தன நின்றவ னெம்பெருமான்

அலைநீருல குக்கர சாகிய,அப்

பேரானமு னிந்தமு னிக்கரையன்

பிறரில்லை நுனக்கெனு மெல்லையினான்,

நீரார்பே ரான்நெடு மாலவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே

பெனண்ட்ரக வாசுதேவனை அழித்தவன் மலை

1084. புகராருரு வாகிமு னிந்தவனைப்

புகழ்வீட முனிந்துயி ருண்டு,அசுரன்

நகராயின பாழ்பட நாமமெறிந்

ததுவன்றியும் வென்றிகொள் வாளவுணன்,

பகராதவ னாயிர நாமமடிப்

பணியாதவ னைப்பணி யாலமரில்,

நிகராயவன் நெஞ்சிடந் தானவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

தன்னை நினைப்பவருக்கு அருள் செய்பவன் மலை

1085. பிச்சச்சிறு dLH டித்துலகில்

பிணந்தின்மட வாரவர் போல்,அங்ஙனே

அச்சமிலர் நாணில ராதன்மையால்

அவர்செய்கை வெறுத்தணி மாமலர்தூய்,

'நச்சிநம னாரடை யாமைநமக்

கருள்செய்' என வுள்குழைந் தார்வமாடு.

நிச்சம்நினை வார்க்கருள் செய்யுமவற்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பாவத்தை அழிக்கும் திருநீர்மலை

1086. பேசுமள வன்றிது வம்மின் நமர்

பிறர்கேட்பதன் முன்பணி வார்வினைகள்,

நாசமது செய்திடும் ஆதன்மையால்

அதுவேநம துய்விடம் நாண்மலர்மேல்

வாசமணி வண்டறை பைம்புறவில்

மனமைந்தொடு நைந்துழல் வார், மதியில்

நீசரவர் சென்றடை யாதவனுக்

கிடம்மாமலை யாவது நீர்மலையே.

பக்தியுன்ன அரசராகிப் பரமனடி சேர்வர்

1087. நெடுமாலவன் மேவிய நீர்மலைமேல்

நிலவும்புகழ் மங்கையர் கோன், அமரில்

கடமாகளி யானைவல் லான்கலியன்

ஒலிசெய்தமிழ் மாலைவல் லார்க்கு, உடனே

விடுமால்வினை வேண்டிடில் மேலுலகும்

எளிதாயிடு மன்றியி லங்கொலிசேர்,

கொடுமாகடல் வையக மாண்டுமதிக்

குடைமன்னவ ராயடி கூடுவரே.

அடிவரவு - அன்று காண்டா அலம் தாங்காத மால் பார்புகர் பிச்சம் பேசு நெடுமால் - பாராயது.




 


 

.






 






 





Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is விற்பெருவிழவும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (முதல் பாகம்)  is  பாராயது
Next