காணாபத்யம்
ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட ஷண்மதத்தில் இடர்பாடுகளை நீக்குபவரான கணபதியினை தொழுவது என்பது காணாபத்யம் என்ற ஒரு பகுதி.
காணாபத்யத்தில் கணபதிதான் பிரதான தெய்வம். வாஸ்து சாஸ்திரப்படி, சிவன் கோயிலோ அல்லது விஷ்ணு கோயிலோ எதுவாக இருந்தாலும் கிராம நிர்மாண திட்டத்தில் கணபதிக்கு என ஒரு கோயில் தனி இடம் பெற வேண்டும். சிவ அல்ல விஷ்ணு கோயில்களில் கணபதி பரிவார தேவதைகளின் வரிசையிலும் இடம் பெறுவர். விஷ்ணு கோயில்களில் இவர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகிறார். வியாசமுனி சொல்லச் சொல்ல மஹாபாரதம் முழுவதையும் எழுதியதால் எழுத்தாளர்களில் முதன்மையான கடவுள். (நிருத்யகணபதி) வாதாபி கணபதி என்ற மூர்த்தி தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது. கர்நாடக சங்கீத கச்சேரிகளின் பெரும்பான்மையான வித்வான்கள் "வாதாபி கணபதிம் பஜே"என்ற கீர்த்தனையுடன் தான் கச்சேரிகளைத் துவக்குவார்கள். முக்கியமாக கணபதியினை பிரம்மச்சாரி வடிவிலேதான் காண்பது. சில இடங்கிளில் சித்தி-புத்தி-வல்லபா என்ற பெயர் கொண்ட மனைவிமார்களுடனும் கணபதி தோற்றமளிக்கின்றார். உபநிஷத்துகளில் 'கணபதி உபநிஷத்'கணபதி வழிபாட்டின் பெருமையையும் சிறப்பையும் வெகுவாக தெரிவிக்கிறது. கணபதி வழிபாடு இந்துக்களுக்கு மட்டுமின்றி பௌத்தர்களுக்கும் முக்கியமானதாக உள்ளது. இந்தோநேஷியா, கம்போடியா, ஜப்பான் மற்றும் அதற்கு சுற்றுப்பக்கத்தில் உள்ள நாடுகளிலும் கீழைய நாடுகளிலும் கணபதி வழிபாடு பிரசித்தமாக உள்ளது.
கூட்டு வழிபாடோ அல்லது தனிநபர் வழிபாடோ, எந்தவித மதச்சடங்கோ எதுவாக இருந்தாலும் அவையாவும் துவக்குவதற்கு முன்பு கணபதி பூஜை நடத்தப்படவேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. வைஷ்ணவர்கள் இடையில் கணபதிபூஜை விச்வக்ஸேன ஆராதனம் என்ற பெயரில் செய்யப்படுகிறது.
யானைத் தலையுடன் எங்கனம் தோன்றினார், ஒரு உடைந்த தந்தத்தை ஏன் ஒரு கையில் வைத்துள்ளார். அவரின் அருள்பாளிக்கும் சக்தி, அவரின் பிறப்பு போன்றவற்றைப் பற்றி வெகுவாக எழுதலாம். பிரணவ மந்திரமான 'ஒம்" வடிவானவர் அவர், யானைத் தலையுடன் இருப்பதற்கு எது காரணமாக இருந்தாலும், சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யாவரையும் தன்வசம் இழுக்கும் சக்தி கொண்டது யானை. வயிறு பெருத்து யானைத்தலையுடன் கூடிய கணபதிக்கு வாகனமாக உள்ளது ஒரு எலி, கடவுள் பரம்பரையில் மிகுந்த வரமளிப்பவராக கருதப்படுபவர் கணபதி.
தென் இந்திய கிராமங்களில் வினாயகருக்கு மட்டும் என பல கோயில்கள் உள்ளன. ஆனால் விநாயகர் இல்லாத கிராமங்களே கிடையாது. ஆற்றங்கரைகளிலே, அரசமரத்தடியிலே, கோயிலின்றி மேல்கூரையின்றியும் அவரைக் கொலு இருக்கக் காணலாம். தங்களுடைய ஸ்னானத்திற்கு பின் முதலாவதாக ஆற்றங்கரையில் உள்ள கணபதியினை மக்கள் வணங்குவார்கள்.