ஜ்யோதிர்லிங்கம் - ராமேஸ்வரம்

ஜ்யோதிர்லிங்கம் - ராமேஸ்வரம்

இந்தியாவின் ஆன்மீக ஒருமைப்பாட்டை தெரிவிக்கப் பலவகை வழிகள்

இருக்கின்றன. அவற்றுள் ஒன்று 12ஜ்யோதிர்லிங்கங்கள். அவை பாரதநாட்டின் பல

பாகங்களில் இருப்பவை. அவ்றை யாத்திரை செய்து காண்பது ஒன்று. பொதுவாக

காசி, ராமேஸ்வரம் என்ற இரண்டையும் இணைத்துச் சொல்வது வழக்கில் உள்ளது.

ராமேஸ்வரம் தெற்கு கோடி சமுத்திரக்கரை. காசி வடக்குக் கோடி கங்கைக்

கரை. ராமேஸ்வரம் தென் கோடியில் தனுஷ்கோடியோடு இணைந்து இருக்கிறது.

இது ராமபிரான் வரலாற்றோடு தொடர்பு உடையது. ரத்னகரம் (இந்து மகா கடல்)

மஹோததி (வங்காள விரிகுடா) இரண்டும் கூடும் இடம்தான் சேது என்று

சொல்லப்படுகிறது. சேது தரிசனம், பாபநாசனம் என்பது பழமொழி. ராமபிரான்

இலங்கைக்குச் செல்வதற்கு முன்பு சிறிது நேரம் தர்ப்பாசனத்தில் அமர்ந்த இடம்

தர்ப்பாசயனம். இந்த க்ஷேத்திரம் ராமேஸ்வரத்திற்கு முன்பாகவே இருக்கிறது.

ராமபிரான் இலங்கைக்கு செல்வதற்குப் பாலம் கட்டுவதற்காக முயற்சி செய்தபோது

சமுத்திரராஜன் வர தாமதமாகியதனால் தனுஸ்ஸை (வில்லை) எடுத்து வைத்தார்.

அந்த வில்லின் ஒரு கோடிதான் தனுஷ்கோடி என்று பெயர் பெற்று விளங்குகிறது.

தனுஷ்கோடி ராமேஸ்வரத்திற்கு 20 A.e. தூரத்தில் உள்ளது, தற்போது ஜீப்பில்

சென்று அடையலாம். இராமபிரான் இலங்கைக்குச் சென்று ராவணணை வதம்

செய்தபிறகு (அவர் நாராயணனின் அவதாரமாக இருந்தாலும்) மனுஷ்ய

வேஷத்தில் பணிகளைச் செய்வதினால் க்ஷத்திரிய வம்சத்தில் உதித்த ராமன்,

பிரம்மாவின் வம்சத்திலுதித்த ராவணனை கொன்ற தோஷ நிவர்த்திக்காக சேது

தரிசனம் செய்து, சமுத்திர ஸ்நானம் செய்து, ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ததாக

வரலாறு.

ஒரு மனிதனால் சிவலிங்கம் போல் உருவாக்கப் படாமல் (சுயம்புவாக)

இயற்கையாகவே வந்த சிவலலிங்கம். ஜ்யோதிர்லிங்கமாக சொல்லப்பட்டிருக்கிறது.

ராமேஸ்வரமும் 12ஸ்தலங்களில் ஜ்யோதிர்லிங்கம் ஒன்றாக சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த ராமேஸ்வர கோவிலில் 22 புண்ய தீர்த்த கிணறுகள் இருக்கின்றன. அவை

கீழே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

1.மஹாலக்ஷ்மி தீர்த்தம் 2. சாவித்திரி தீர்த்தம் 3. காயத்ரி தீர்த்தம் 4.சரஸ்வதி

தீர்த்தம் 5. சேதுமாதவ தீர்த்தம் 6. கந்தமாதன தீர்த்தம் 7. கவாஷய தீர்த்தம் 8.

கவாய தீர்த்தம் 9. நள தீர்த்தம் 10. நீல தீர்த்தம் 11. சங்கு தீர்த்தம் 12. சக்ர தீர்த்தம்

13. ப்ரும்மஹத்தி விமோசன தீர்த்தம் 14. சூரிய தீர்த்தம் 15. சந்த்ர தீர்த்தம் 16.

கங்கா தீர்த்தம் 17. யமுனா தீர்த்தம் 18. ஜய தீர்த்தம். 19.சிவ தீர்த்தம் 20. சாத்ய

அம்ருத தீர்த்தம் 21 சர்வ தீர்த்தம் 22. கோடி தீர்த்தம்.

இதைத் தவிரக் கோவிலைச் சுற்றி அந்த ஷேத்திரத்தில் 31 தீர்த்தங்கள்

இருக்கின்றன. இப்படிப்பல வகை புண்ய தீர்த்தங்கள் இருப்பதோடு கூட

கோவிலின் கிழக்கு பக்கத்தில் அக்னி தீர்த்தம் இருக்கிறது. அங்குதான் ஸ்ரீ காஞ்சி

காமகோடிபீடம் சங்கர மடத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் சிஷ்யர்களுடன் ஸ்நானம்

செய்தவுடன் தரிசனம் செய்யும்படியாக அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில்

தனுஷ்கோடியில் அல்லது அக்னி தீர்த்தத்தில் ஸ்நானம் செய்யவேண்டும். பிறகு

அங்கிருந்து வில்போல் மணலில் அமைத்து கோவிலில் உள்ள சேதுமாதவர்

சன்னதியில் வைத்து பூஜை செய்து சங்கல்பம் செய்து கொண்டு "காசி யாத்திரை"

தொடங்குவது வழக்கம். பல புண்ய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, அலகாபாத்தில்

சுத்த கங்கையில் இந்த மணலைப் போட்டுவிட வேண்டும். அங்கிருந்து சுத்த

கங்கையை எடுத்துக் கொண்டு பல ஷேத்திரங்களை தரிசனம் செய்து கொண்டு

ராமேஸ்வரம் வந்து ஸ்ரீ ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் செய்து

யாத்திரையைப் பூர்த்தி செய்வது வழக்கம். இப்படியாக ராமேஸ்ரம் முதல் காசிவரை

ஆன்மீக யாத்திரைக்கு முக்யத்துவமாக விளங்குவது ராமேஸ்வரம்.

பிதிர்சாபம் உள்ள குடும்பங்களில் ராமேஸ்வரம் சென்று சமுத்திர ஸ்நானம்

செய்து தில ஹோமம் செய்வார்கள். இதன் மூலம் பிதிர் தோஷத்திலிருந்து

விடுபடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. வம்சவிருத்தி இல்லாதவர்கள்

ராமேஸ்வரத்தில் சமுத்திர ஸ்நானம் செய்து எல்லா தோஷங்களையும் போக்கிக்

கொண்டு "நாகப்ரதிஷ்டை" செய்தால் வம்சவிருத்தி ஏற்படும் என்பதும்

வழக்கதிலுள்ளது.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is புராண ரீதியாக கிரஹணங்கள்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  கார்த்திகை
Next