கார்த்திகை

கார்த்திகை

ஒவ்வொரு மாதமும் நட்சத்திரத்தின்பெயரினால் குறிக்கப்படுகிறது. கிருத்திகா

நட்சத்திரத்தையட்டி இந்த மாதத்திற்குக் கார்த்திகை மாதமென்று பெயர்.

பரமேஸ்வரன் தன்னுடைய ஜோதியினால் கிருத்திகா நட்சத்திர தேவதைகள்

மூலமாக முருகனான கார்த்திகேயனைத் தோற்றுவித்தார். ஆகவேதான் கார்த்திகை

மாதத்தில் முருகனுக்கு உகந்ததான ஸ்கந்த சஷ்டி வருகிறது.

சிவபெருமானுடைய முழு உருவத்தைக் காண்பதற்கும் பல தேவர்கள்

முயன்றார்கள். அவர்களால் முடியாதபோது பிரம்மாவும் விஷ்ணுவும், ஹம்ச

வராஹ வடிவத்தில், ஆகாயத்திலும், பாதாளத்திலும், தேடினார்கள். அப்பொழுது

அடிமுடி காணாத ஜோதி வடிவமாக இறைவன் காட்சியளித்தார். அதுதான் இன்றும்

பஞ்சபூத ஷேத்திரங்களில் ஒன்றான அண்ணாமலையில் பரமேசுவரன் தீப

வடிவாக பிரகாசிக்கிறார். அதுவே அண்ணாமலை தீபம் என வழங்கப்படுகிறது.

பரணி நட்சத்திரத்தில் மகா பரணி என்று போற்றக்கூடிய நந்நாளில் ஒரு எலி

சிவன் கோயிலில் உள்ள தீபத்தைத் தூண்டியதனால் தீபம் பிரகாசமாக ஒளிவிட்டது.

அதனால் மறு ஜென்மத்தில் அந்த எலி மிகப் பெரிய அரசனாக விளங்கியது

என்பது புராண வரலாறு. அதை வைத்துத்தான் ஒவ்வொரு கோவிலிலும்,

கார்த்திகை மாதம் பௌர்ணமி அல்லது மகாபரணி நட்சத்திரத்தன்று. நம்மிடையே

உள்ள பழமைகள், பாவங்கள், கவலைகள் இவைகளெல்லாவற்றையும் பொசுக்கி,

சொர்க்கத்திற்கு வழிகாட்டும் விழாவாக, சொக்கப்பானை என்ற தமிழ்ச் சொல்லாக

ஒவ்வொரு கோவிலிலும் சொக்கப்பானை விழா நடைபெறுகிறது.

கார்த்திகை மாதத்தில்தான் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதங்கள்

இருந்து பூஜைகள் செய்து மகாஜோதி தரிசனத்திற்குச் செல்கிறார்கள்.

சிவபூஜைக்கும் - கார்த்திகை சோமவாரம் மிக விசேஷம். ஸ்நானத்திலும் துலா

ஸ்நானத்திற்கு அடுத்து கார்த்திகை மாத ஸ்நானம் மிக விசேஷம். இவ்வளவு

பெருமை பொருந்திய கார்த்திகை மாதத்தில் ஸ்நானம் செய்து பூஜை செய்து,

ஜோதி வடிவமான சிவபெருமானைத் தரிசிப்பது, முருகனை வழிபடுவது போன்ற

ஆன்மிக காரியங்களில் ஈடுபட்டு இறையருளைப் பெறுவோம்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஜ்யோதிர்லிங்கம் - ராமேஸ்வரம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  ஸ்ரீ பகவானின் செயலில் வேற்றுமையும் ஒற்றுமையும்
Next