இந்த உலகம், உலகில் உள்ள பொருள்கள் எல்லாம் மாயையால் படைக்கப்
படுகிறது என்று வேதாந்திகள் கூறுகிறார்கள். ஆன்ம ஞானத்தினால் மாயை விலகி
மோட்சம் கிட்டும் என்று கூறப்படுகிறது. உலகில் பல பொருள்கள் தூரத்தில்
இருப்பதால் கண்ணுக்கு தெரிவதில்லை. சில பொருள்கள் அருகில் இருந்தும்
இருட்டில் தெரிவதில்லை. பார்வையற்றவனுக்கு வெளிச்சம் இருந்தும் பொருள்கள்
கண்ணுக்குத் தெரிவதில்லை. தொட்டால்தான் உணர முடிகிறது. செவிடனுக்கு
காதால் கேட்க முடியாவிட்டாலும், கண்ணால் பார்க்க முடிகிறது. மனவளர்ச்சி
இல்லாதவனுக்கு எல்லா உறுப்புகளும் சரியாக இருந்தும் மனது சரியாக
இல்லாததால் ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது. எல்லா உறுப்புகளும் நன்றாக
இருந்தும் தூங்கும்போது ஒரு பொருளும் தெரிவதில்லை.
ஒரு மனிதன் தூங்குகிறான். சொப்பனம் பலவகைப்பட்டதாக இருக்கிறது. சில
சொப்பனங்கள் சாப்பிடுவது போலவும், வெளியில் செல்வது போலவும்,
சிநேகிதர்களுடன் பேசி சந்தோஷப்படுவதுபோலவும் இருக்கும். சத்ருக்களிடத்தில்
கூட சொப்பனத்தில் சிநேகமாக பேசுவதாகக் தெரியும். ஆனால் விழித்து
எழுந்தவுடன் சாப்பிட்ட திருப்தியோ, சத்ருக்களிடம் நண்பன் போலப் பேசும்
ஆசையோ இருக்காது. சொப்பனத்தில் கண்டவைகள் அந்த நேரத்தில் சரியாக
இருப்பது போல் தோன்றுகிறது. விழித்தவுடன் அவை சரியாக இருக்காது பொய்
என்று தோன்றுகிறது. விழித்துக் கொண்டு இருக்கும்போதும் சில பொருள்கள்
பார்க்க நிஜம் போல் தோன்றுகிறது. சிறிது நேரத்தில் மாறிப் போய் விடுகிறது.
வட்ட வடட்மான ஒரு ரூபாய். அரை ரூபாய் வடிவமான டின்னின் பாகங்கள்
இரவில் பார்க்கம்போது நிஜ ரூபாய் போல் தோன்றுகிறது. எடுத்துப் பார்த்த பிறகு
நிஜ ரூபாய் இல்லை என்று தெரிந்து தூக்கி எறிந்து விடுகிறோம். இப்படி வெளியில்
பொருள்கள் பலவிதமாக தோன்றகின்றன. அதேபோல் எல்லா மனிதர்களையும்
நண்பர்களாக நினைத்து அவர்களுடன் பலவிதமான வரவு செலவுகளை
செய்கிறோம். அவர்கள் நம்மை மாற்றி விடுகிறார்கள். ஆகையால் உண்மை
நண்பர்களைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. இதே போல் மனத்தில் பல
விஷயங்களை ஆலோசகனை செய்து கொண்டு தீர்மானம் பண்ணி விடுகிறோம்.
நேரில் பார்த்து பேசிப் பழகிய பிறகு அத்தனையும் பொய் என்று தெரிகிறது.
அதே போல் இன்றைய நாளில் விஞ்ஞானம் முன்னேறிக் கொண்டு
இருக்கிறது. ஒவ்வொரு பொருளையும் விஞ்ஞான ரீதியாக கண்டுபிடிக்கும் முன்பு
அந்தப் பொருளின் அறிவு ஏற்படுவதில்லை. விஞ்ஞான முன்னேற்ம் வந்த பிறகும்
அதைக் காட்டிலும் மேம்பட்ட பட்டவைகளை பயனற்றதாக்கி விடுகிறது.
உலகில் இப்போது எத்தனை பொருள்களை பார்க்கிறோம்? அவைகள்
பெரும்பாலும் நிலையாக நிலைத்து நிற்பதில்லை. வளர்ந்து கொண்டும், குறைந்து
கொண்டும், மாறிக்கொண்டும் திடீரென குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு அழிந்தும்
விடுகின்றன. அழியாத பொருட்களை உலகில் நாம் பார்க்க முடியவில்லை. அப்படி
அழியாத பொருளைத்தான் 'பரம் பொருள்' என்கிறார்கள். சில சமயங்களில்
பொருள்களின் தன்மை தெரியாதபோது அறியாமை என்கிறோம். இதைப் பெரிய
அளவில், உலகளாவிய அளவில் உலகம் தோன்றக் காரணமாக உள்ளதை மாயா
சக்தி என்கிறோம். மாயா சக்தி எல்லாம் ஜடமானவை. அதற்குப்படைக்கும் திறன்
பரமாத்மாவால் கிடைக்கிறது. பரமாத்மா ஒன்றும் செய்யாது. ஆனால்
எல்லாவற்றையும் செய்விக்கிறது.
விளக்கு மாத்திரம் இருந்தால் போதாது. அதற்கு எண்ணை விட்டு, FK
போட்டு ஏற்ற வேண்டும். பின்புதான் ஒளி கிடைக்கும். விளக்கு இல்லாமல்,
எண்ணை, FK கொண்டு விளக்கு ஏற்ற முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதாரம்
விளக்கு. அதேபோல் பரம்பொருள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாகும். அந்த
ஆதாரமான பரம்பொருளின் மாயை பல காரியங்கள் பண்ணும்போது உலகம், பல
பொருட்கள் யாவும் இயங்குகிறது. அந்த ஆதாரப் பிரம்மத்தினால்தான்
இத்தனையும் இயங்குகிறது. இயங்கி காலக்ரமத்தில் கறைந்து அழிந்து போகிறது.
அழியாதது பரம்பொரள் ஒன்றுதான் என்று ஞானதீபத்தை ஒவ்வொருவரின்
உள்ளத்திலேயும் கண்ணபிரானால் ஏற்படுத்தப்பட்ட தீபாவளி நன்னாளில் ஏற்றிக்
கொண்டால், மாயை, அறியாமை ஆகியவைகளின் கார்யங்கள் அகன்று,
ஞானஜோதியாக ஒவ்வொரு மனிதனும் வாழ முடியும்.
இந்த நிலையை அடைய ஒவ்வொரு மனிதனும் புண்ணிய திருநாள் தீபாவளி
அன்று கங்கா ஸ்நானம் செய்த அந்த பலத்தோடு ஞானதீபத்தை ஹ்ருதயத்தில்
ஏற்றிக் கொள்வாமாக.
"ரட்யசி நிஜ ஹ்ருதயஸ்தம் தேவம்"