மண் கரையும் மணல் கரையாது

மண் கரையும் மணல் கரையாது.

சூரியன் உதித்தால் எப்படித் தாமரை மலர்கின்றதோ, அதுபோல் கடவுள்

நினைப்பு இருந்தால் நம் மனம் எனும் தாமரையும் ஆனந்தத்துடன் மலர்ந்து

இருக்கும். தாமரைப் பூவை எப்படி வண்டு வந்து அண்டுகின்றதோ, அதுபோல்

நம்மை விஷயங்கள் வந்து அண்டுகின்றன.

தாமரையானது தண்ணீரில் இருந்தால்தான் செழிப்புற்று இருக்கும்.

அதேபோல் நமது மனம் கருணை (அன்பு) என்னும் குளத்தில் இருந்தால்தான்

சாந்தமாக இருக்கும்.

தாமரைத் தண்டின் நூலினால் எப்படிப் பெரிய பிராணியைக்

கட்டமுடியாதோ, அதுபோல் நம் மனத்தின் நினைப்பினால் மாத்திரம் எல்லாக்

காரியத்தையும் செய்ய முடியாது.

தாமரைப்பூ எப்படி நல்ல வாசனையுடன் திகழ்கிறேதா, அதேபோல் நம்

மனமும் நல்லபடி திகழவேண்டும். தாமரைப்பூ எப்படி சிவப்பாகவும்

வெண்மையாகவும் இருக்கிறதோ, அதே போல் நம் மனத்தில் ரஜோ குணமும்

ஸத்வ குணமும் இருக்கிறது. செந்தாமரை ரஜோகுணம், வெண்தாமரை ஸத்வ

குணம்.

தாமரைத் தண்டு எவ்விதம் கறுப்பாகவே இருக்கிறதோ, அதேபோல் நம்

மனம் தமோகுணம் உடையதாய் இருக்கிறது. தாமரைக் குளத்தில் தண்ணீர் எப்படி

எப்பொழுதும் 'ஜில்' என்று இருக்கிறதோ அதுபோல் நம் மனமானது கடவுள்

நினைப்போடு இருந்தால் எப்பொழுதும் சாந்தமாயும், குளுமையாகவும் இருக்கும்.

சந்தன மரத்தைப் பாம்புகள் சுற்றிக்கொண்டேயிருக்கும். அதனால் சந்தன

மரத்திற்கோ சந்தனக்கட்டைக்கோ, எவ்வித கெடுதலும் ஏற்படாது. அதுபோல்

மகான்களிடத்தில் எவ்வளவு துஷ்டர்கள் இருந்தாலும் அவர்களுடைய

மனத்திற்கோ, உடலுக்கோ, ஒருவிதமான மாறுதலும் ஏற்படுவது இல்லை.

தாமரைப்பூ சூரியனைக் கண்டால் மலர்கிறது, இரவில் மூடிக் கொள்கிறது.

ஆனால் ரோஜாப்பூ ஒருதடவை மலர்ந்து விட்டால் மறுபடியும மூடிக் கொள்ளாது.

எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருக்கும். அதே போல் சாமான்ய

மனிதர்களின் மனம் ஆசைப்பட்ட பொருள் கிடைத்ததும், சந்தோஷத்தால்

மலர்கிறது. விரும்பிய பொருள் கிடைக்காவிட்டால் மனம் சுருங்குகின்றது. ஆனால்

மகான்களுடைய மனசு எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருக்கிறது. உன்

மனசு எப்போதும் மலர்ந்த நிலையிலேயே இருக்கிறது. உன் வாழ்க்கையில்

எப்போது கஷ்டங்களும் துன்பங்களும் அதிகமாக ஏற்படுகின்றதோ, அப்போது

தான் உன் மனசை மிகவும் தைரியமாக வைத்துக்கொள்ளவேண்டும். c

கஷ்டப்படுகிறாய் என்றால் c செய்த பாவத்தை அனுபவிக்கிறாய் என்று உன்

மனதைச் சமாதானம் செய்துகொள். எனது ஆட்கள் வீடு, மனைவி, புதல்வர்கள்,

பூமி இவை என்று சந்தோஷப்படாதே. எல்லாம் ஒரு காலத்தில் நீங்கிவிடும்.

அல்லது c ஒரு நாள் அவற்றைவிட்டுப் போக நேரிடும். உன்னுடன் எப்போதும்

உன்னைவிட்டுப் பிரியாமல் இருப்பது c செய்த நல்வினை தீவினைகளே.

இப்போது c சந்தோஷமாய் இருக்கிறாய் என்றால் c செய்த நல்வினைப் பயன்தான்

காரணம். அதை அறிந்து கொண்டு இனியும் எப்போதும் சந்தோஷமாக இருக்க

கடவுள் வழிபாட்டையும் தர்ம காரியங்களையும் நிறையச் செய், அதுவே c மேலும்

மேன்மையடைய வழியாகும்.

சாமான்யமான மண்ணை எடுத்து ஜலத்தில் கரைத்தால் ஜலம் பூராவும்

கலங்கிவிடும். ஆனால் மணலைத் தண்ணீரில் கரைத்தால் தண்ணீரில் கலக்கம்

ஏற்படாது. அதேபோல் உலகத்தில் மூர்க்கர்கள் இருப்பது உலகத்திற்குக் கலகத்தைச்

செய்யும். ஆனால், ஆண்டவரின் அருள் பெற்றவர்கள், ஆத்ம ஞானிகள் உலகில்

இருப்பதால் உலகத்திற்கு எத்தகைய கெடுதலும் ஏற்படாது.

மண் தண்ணீரில் கரைந்துவிடுகிறது. நல்ல மணல் தண்ணீரில் கரைவதில்லை.

அதேபோல் சாமான்ய மனிதர்கள் உலகில் தாமும் கலந்துவிடுகின்றனர். ஆத்ம

ஞானிகள் உலகோடு கலக்காமல், ஆனால் உலகிலேயே இருக்கின்றனர். தராசில்

ஒருபக்கம் அளந்து காட்டும் படிக்கல்லும், மற்றொரு பக்கத்தில் அது அளவு

காட்டும் பொருளையும் காண்கிறோம். இரும்புப் படிக்கல்லும் உயர்ந்த பொருளும்

சமமானதளவில் இருந்தாலும், உயர்ந்த பொருளுக்குப் போடும் மனமதிப்பை

சாமான்ய கல்லுக்குப் போடமாட்டார்கள். சாமான்யர்களும் ஞானியும் ஒரேமாதிரி

இருந்தாலும் தன்மையில் மேலோங்கி இருக்கிறார்கள். அதேபோல் படித்தவனும்,

படிக்காதவனும் ஒரே காரியத்தில் சமமாக ஈடுபட்டாலும் படித்தவனுக்கு

கொடுக்கும் மதிப்பைப் படிக்காதவனுக்குக் கொடுக்க முடியாது.

கடிகாரத்தின் முள் நகருவது தெரியாமல் எவ்விதம் நகர்ந்து

போய்க்கொண்டே இருக்கிறதோ அதே போல் நம்முடைய மனத்தில்

இன்னதைத்தான் நினைக்கிறோம் என்று தெரியாமல் எதையாவது நினைத்துக்

கொண்டே தான் இருக்கிறோம். கடிகாரத்தில் சாவி இல்லாவிட்டால் முள்

நகருவதில்லை. அதேபோல் விழிப்பும் சொப்பனமும் இல்லாவிட்டால் நம் மனம்

ஒன்றையும் சிந்திப்பதில்லை.

கடிகாரத்திற்கு ஒரு நாளைக்கு ஒருமுறை சாவி கொடுத்தால் போதும். நமக்கு

இரண்டு மூன்று தடவை தினமும் ஆகாரம் கொடுக்க வேண்டும். கடிகாரத்திற்கு

சாவி அதிகம் கொடுத்து விட்டாலும் அது சீக்கிரம் கெட்டு விடும். குறைவாகக்

கொடுத்தாலும் அடிக்கடி நின்றுவிடும். அதே போல் நமக்கும் உணவை அதிகமாகச்

சாப்பிட்டாலும் கெடுதல் உண்டாகும். கடிகாரத்திற்கு அளவாகச் சாவி கொடுப்பது

போல் உடலக்கும், குறையாமலும் அதிகமாகாமலும் உணவை அளிக்க வேண்டும்.

அறிவுள்ள ஒருவனால் சாவி கொடுக்கப்பட்டு ஜடமான கடிகாரம் ஓடுகிறது.

அதேபோல் பேரறிவு சொரூபமாய் உள்ள பரம்பொருளின் சக்தியினால் இந்த

ஜடமான சரீரம் உலகில் நடமாடுகிறது.

மின்விசிறி சுற்ற வேண்டுமானால் ஸ்விட்சைப் போடுகிறோம், அது

சுற்றுகிறது. அதேபோல் நாம் நல்வினை தீவினைக் காரியங்களைச் செய்ததன்

பலனாக சம்சார சாகரத்தில் சுற்றுகிறோம். மின்விசிறியின் காற்று சிலருக்கு ஒத்துக்

கொள்ளும் - சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. அதே போல் உண்மையான சுகத்தை

விரும்புகிறவருக்கு இந்த சம்சார சாகரத்தில் ஏற்படும் சுகதுக்கங்கள் பிடிக்காது.

சாமான்ய மனிதர்கள் இந்த சம்சாரத்தில் ஏற்படக்கூடிய சுகத்தையே பெரிதாக

நினைத்துவிடுவார்கள்.

மின்விசிறியின் காற்று செயற்கை. உண்மையான காற்று அல்ல. அதேபோல்

சம்சாரத்தில் ஏற்படக்கூடிய சுகதுக்கங்களும் பொருள்கள் மூலம் ஏற்படக்கூடிய ஒரு

செயற்கை சுகமே, உண்மையான இயற்கைச் சுகமல்ல.

இயற்கைக் காற்றின் சுகத்தை அனுபவிக்க வேண்டுமானால் மரங்கள்,

செடிகள் இல்லாத பரந்த பிரதேசத்திற்குச் செல்ல வேண்டும். அதேபோல் எங்கும்

நிறைந்து பரந்திருக்கும் ஆண்டவனின் அருள் எங்கு கிடைக்கமோ அங்கு சென்று

உண்மையான நம்முடைய இயற்கையான சுகத்தைப் பெற முயலவேண்டும்.

நதியில் எவ்வளவு வேகத்துடன் ஜலம் செல்கிறதோ அவ்வளவு வேகம்

நதியிலிருந்து பாயும் வாய்க்காலில் போகாது. அதே போல் மனத்தில் எவ்வளவு

வேகத்துடன் எண்ணக்ஙள் எழுகின்றனவோ அவ்வளவு வேகம் இந்திரியங்கள்

மூலம் செயல்படுகையில் இருக்காது.

சமுத்திரம் என்றாலே பெரிய பெரிய அலைகள் மீன்கள், முதலைகள்,

நல்முத்து எல்லாம்தான் இருக்கும். அதேபோல் வாழ்க்கை என்றாலே சுகம், துக்கம்,

பெரியது, சிறியது, எல்லாம் இருக்கத்தான் இருக்கும்.

மயில்கள் தோகை விரித்து ஆட ஆரம்பித்தால் மழை வரும் என்பார்கள்.

அதேபோல் மகான்கள் வசிக்கும் இடங்களில் சுபிட்சம் விளங்கும்


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is ஞானதீபம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  இறைவழிபாட்டின் பெருமை
Next