நம்புங்கள் நல்லவை நடக்கும்

நம்புங்கள், நல்லவை நடக்கும்.

"ஜபங்கள் பலவிதமாக இருக்கின்றன. கணவனுடன் சேர்ந்து செய்யும்

ஜபமும் இருக்கிறது. அதேபோலப் பெண்கள் தனியாகச் செய்யும் ஜபங்களும்

இருக்கின்றனவா? பெண்கள் காயத்ரி ஜபம் செய்யலாமா? என்று கேட்டார் சுபா.

"மந்திரத்திலும், ஜபத்திலும் ஆண்களுக்குத் தனிப் பெண்களுக்கு தனி என்ற

வேறுபாட இல்லை. அனைத்தையும் இருபாலாரும் செய்யலாம். ஆனால் காயத்ரி

என்பது ஜபம் அல்ல. அது ஒருவகையான வழிபாடு. அதைப் பூணூல் தரித்து,

பிரமாணீயத்தைக் கடைப்பிடிக்கும் - அந்த்ணனாகப் பிறந்தவன் மட்டும் - மக்கள்

மட்டுமே செய்ய வேண்டும் என்பது GJF. அதைப் பெண்கள் முடியாது. ஆனால்

கணவனிடம் பதி பக்தியுடன் இருக்கும் பெண்களுககுக் கணவன் செய்யும் நல்ல

காரியங்கள் எல்லாவற்றிலும் பலனில் பங்கு உண்டு!" என்று சொல்லி,

ஊக்கப்படுத்தினார் சுவாமிகள்.

"காலம் எவ்வளவோ மாறிக் கொண்டு வருகிறது. அதற்கேற்ப நாம் சில

மாறுதல்களைச் செய்து கொண்டால் என்ன? ஒன்பது கஜ மடிசார் புடவை கட்டிக்

கொள்ள வேண்டியது அவசியமா? அதை விட்டுவிடலாமா?" என்ற கேட்டார்

திருமதி ரோகிணி.

"வேலைக்குத் தகுந்த வேஷம் போட்டுத்தான் ஆக வேண்டும். உதாரணமாக,

ஆபீசுக்குப் போகும்போது ஒர் உடை. விட்டில் இருக்கும் போது ஓர் உடை,

இப்படி அணிகிறோம் அல்லவா? அந்தந்த உடையை அணியும் போது,

மனத்திலும் அதற்கேற்ற பக்குவம் வந்து விடுகிறது. அதே போலப் பூஜை செய்யும்

நேரத்தில் அதற்கேற்ற உடையை அணிகிறோம். மனத்திலும் அந்த சமயத்தில்

அதற்கேற்ற பக்குவம் வந்துவிடும். இதை நாம் ஒரு கடமையாகப் கருத வேண்டும்

- தகந்த உடையுடன் ஆபீசுக்குப் போய் வருவதைப் போல!"

"கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் அல்லவா? அப்போது அவரை

வீட்டில் இருந்தே தியானித்தால் போதாதா? கோவிலுக்குப் போய் வரவேண்டிய

அவசியம் என்ன?" - இது இளைஞர் ஜனார்த்தனத்தின் கேள்வி?

இதற்குச் சுவாமிகள் தாராளமாக விட்டுக் கொடுத்தே பதில் கூறினார். "இந்து

மதத்தின் நியதிகளில், கோவிலுக்குப் போவதைப் பற்றித் தனியாகக் கோட்பாடுகள்

எதுவுமே இல்லை. அதனால் போக இயலாதவர்கள் தாராளமாக வீட்டிலிருந்தே

தியானம் செய்யலாம். வீட்டிலிருந்தே கடவுளைத் தியானம் செய்ய முடியாத

நிலையில், கோயிலுக்குச் சென்றால், அங்கு நிலவும் அமைதியான, பக்தி மணம்

கமழும் சூழ்நிலையில் தியானத்தில் ஈடுபடுவது சௌகரியமாக இருக்கும் என்ற

உத்தேசத்துடன் அமைக்கப்பட்ட நியதிதான் அது!"

"ஜோதிட சாஸ்திரத்தில், சில காரியங்களுக்குப் பரிகாரம் செய்த, குறையை

நிவர்த்தி செய்து விடமுடியும் என்று சொல்கிறார்களே? விதிப்படி சில காரியங்கள்

நடக்கும் போது, அதைப் பரிகாரம் செய்து மாற்றி விட முடியுமா?" என்று

கேட்கிறார் டி.எஸ்.நாராயணசாமி.

"ஜோதிட சாஸ்திரம் என்பது இந்தப் பூமியில தோன்றிய போது,

பொதுமக்களின் நன்மைக்காகவே ஏற்பட்டது. தேசத்தில் எப்போது மழைபெய்யும்?

யாகங்களை எப்போது செய்யலாம்? நல்ல காரியங்களுக்கு உரிய நேரம் எது? -

இப்படி வழிகாட்டி, வழிமுறைகளைச் சொல்வதற்குத்தான் அது ஏற்பட்டது. அதில்

சொல்லப்பட்டிருக்கும் பரிகாரங்களின் மூலம், நடக்கவிருக்கம் தீமைகளின்

அளவைக் குறைக்கலாமே தவிர. நீக்க இயலாது., பகவான் ஒருவர்தான்

மாற்றவல்லவர். அவர்தான் எல்லாவற்றுக்கும் மேற்ப்பட்டவர் - சுப்ரீம்!

நவக்கிரகங்களுக்கு குட்டி தேவதைகள்தாம். வெயில் அடிக்கும்போது என்ன

செய்கிறோம்? குடையைப் பிடித்துக் கொள்கிறோம்!அதனால் தலையில்

'சுள்'ளென்ற அடிக்கும் வெயிலின் வேகத்தைக் குறைக்கலாமே தவிர., வெப்பமே

தெரியாமல் செய்துவிட முடியாது. அதைப்போலத்தான் பரிகாரங்களும், கெடுதலின்

வேகத்தைக் குறைக்கும் அளவுக்கு மட்டமே உதவும். மேலும் அப்படிச் செய்து

கொள்ளும்போது, மனோ தத்தவரீதியாக நமக்கு ஒரு தெம்பும் பலமும் கூடக்

கிடைக்கின்றன!"

"ராகுகாலம், எமகண்டம் போன்ற வேளைகளில் நல்ல காரியங்கள் எதையும்

செய்யக்கூடாது என்று சொல்கிறார்களே? அப்படி விட்டுவிடுவதால் நிறைய நேரம்

வீணாகிப் போய் விடுமே?" என்று கேட்கிறார் ரோகிணி.

"ராகுகாலம், எமகண்டம் போன்ற வேளைகளில் நல்ல காரியங்களைச் செய்ய

வேண்டாம் என்று சொல்லவில்லையே? தொடங்க வேண்டாம் என்றுதானே

சொல்லுகிறார்கள்? அது ஆரம்பிப்பதற்கு முன், சில நிமிடங்கள் முன்னதாகவே,

நாம் நல்ல காரியங்களைச் செய்ய ஆரம்பித்து விடலாமே? அப்போது கொஞ்சம்

கூடுதலான நேரம் தானே கிடைக்கும்? விரயம் ஆக முடியாதே?" என்று சிரிக்கிறார்

சுவாமிகள்.

"ஒவ்வொரு பண்டிகைக்கும் இன்னின்ன பட்சணம் செய்ய வேண்டும் என்ற

விதிமுறை வகுத்திருக்கிறார்களே, அது ஏன்? அப்படிச் செய்யாவிட்டால்

கடவுளின் கோபத்துக்கு ஆளாக நேரிடுமா?" என்று கேட்கிறார் ரோகிணி

"பண்டிகை என்பது ஒரு நல்ல நாள். அதைக் கொண்டாடும்போது. இனிய

பட்சணங்களைச் சாப்பிடுவது நமது மனத்தை மகிழ்ச்சி அடையச் செய்யும்.

ஆனால் இது லௌகீகமான விஷயம். இதற்கும் சாஸ்திரத்துக்கும் சம்பந்தமே

கிடையாது. நாம் எதை விரும்பி உண்கிறோமோ, அதை ஆண்டவனுக்குப்

படைக்கிறோம். இது நமது மரபு, வட இந்தியாவில் சாதத்தை இறைவனுக்கு

நிவேதனம் செய்வதில்லை. அவர்கள் சாப்பிடும் இனிப்பைத்தான்

ஆண்டவனுக்குப் படைக்கிறார்கள். சில கிராமத்துத் தேவதைகளுக்கு, வழிபடும்

பக்தர்கள், அவர்கள் உண்ணும் மாமிசத்தைதத்தான் படைக்கிறார்கள். அது

அவர்களுடைய வழக்கம். நாம் உண்ணுவதை, இறைவனுக்கு நிவேதனமாகப்

படைத்து, அதை அவர் நமக்கு அருளியதற்கு நன்றி தெரிவித்து உண்பது

நெறிமுறை. உள்ளன்போடு ஒரு சிறு கற்கண்டை நிவேதனம் செய்தால்

கூடப்போதும்" என்று தைரியம் சொல்லுகிறார் சுவாமிகள்.

"பத்திரிகைகளில் 'மகாலட்சுமி யந்திரம், முந்நூறு நாட்கள் பலன் தரக்கூடியது'

என்றெல்லாம் விளம்பரம் செய்கிறார்களே? அது நடைமுறையில் சாத்தியமானதா?"

என்று கேட்கிறார் டி.எஸ். நாராயணசாமி,

"ஜனங்கள் ஏமாந்து கொண்டு இருக்கிற வரைக்கும் இது போன்று

விளம்பரங்களும் இருந்து கொண்டு தான் இருக்கும். ஜனங்களுக்குத் தெய்வ

நம்பிக்கையும அதனால் தோன்றும் மனோதிடமும் இருந்து விட்டால், இந்தமாதிரி

விளம்பரங்களுக்கு அவசியமே ஏற்படாது!" என்று கூறிப் புன்னகை செய்கிறார்

சுவாமிகள்.

போஸட் கார்டில் சில வாசகங்களை எழுதி அதை அப்படியே காப்பி செய்து

பத்து இருபது விலாசங்களுக்கு அனுப்பவேண்டும் என்று சொல்கிறார்களே

அப்படிச் செய்யாவிட்டால் கெடுதல் ஏற்படும் என்று கூறுகிறார்களே அப்படி

எல்லாம் நடக்குமா என்று கேட்கிறார் திருமதி கோபாலன்.

"நல்லதும் கெட்டதும் போஸ்ட் கார்டில் வந்து சேர்ந்து விடமுடியும் என்று

நினைக்கிறீர்களா?" என்று கேட்ட சுவாமிகள், "உங்கள் மனோபலமும் தெய்வ

நம்பிக்கையும் தான் முக்கியம். இவற்றுக்கெல்லாம் பயப்படவேண்டியதில்லை!"

என்று கூறுகிறார்.

"வருணஜபம் செய்தால் மழை வரும் என்கிறார்களே? அது உண்மையா?

அப்படி நடக்குமா?" என்று நான் கேட்கிறேன்.

"பிரத்தியட்சமாக நடக்கிறது. இந்த உலகத்தில் வருண ஜபமும்,

புத்திரகாமேஷ்டி யாகமும் பலன் தந்து கொண்டிருப்பதை, கண்கூடாகப் பலரும்

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சந்தேகமே வேண்டாம்" என்று உறுதியாக

அடித்துச் சொல்கிறார் சுவாமிகள்.

"வெளிநாடுகளில் நம்மைப்பற்றிச் சொல்லிக் கேலி செய்யும் ஒரு விஷயம்,

இந்திரலோகம், யமலோகம் போன்ற பல உலகங்களையும் வைத்து, அதை ஒட்டி

நாம் கதைகளைச் சொல்லுகிறோம் என்பதுதான். உண்மையாகவே இப்படிப்பட்ட

லோகங்கள் இருக்கின்றனவா?" என்று நான் தொடர்ந்து கேட்கிறேன்.

"சந்திரமண்டலத்துக்குப் போய் வந்தவர்களாலேயே அங்கே என்ன

பார்த்தேன் என்று முழுமையாக விவரமாகக் கூற முடியவில்லை. அந்த மண்ணைக்

கொஞ்சம் வெட்டிக் கொண்டு வந்து, இங்கேதான் ஆராய்ச்சி செய்கிறார்கள். அந்த

மண்ணே சந்திரலோகம் ஆகிவிடாது. மேல்நாட்டில் கூட, தவறு செய்தால்,

'நரகத்துக்குப் போ! (Go to hell) என்று சபிக்கிறார்கள் அல்லவா. அதை நாம்

ஏற்றுக் கொள்ளவில்லையா? விஞ்ஞானிகளும் கூட இதைத்தவிர, இன்னொரு

லோகம் இருப்பதாக இன்றும் ஒப்புக் கொள்கிறார்கள். புராண ரீதியாக ஒரே ஒரு

பரம்பொருள் மட்டும் தான் உண்டு. வரலாறு வேறு, தத்துவம் வேறு, இரண்டையும்

கலக்கக் கூடாது!" என்கிறார் சுவாமிகள்.

"பொதுவாக நல்லவர்களுக்குக் கஷ்டமும், கெட்டவர்களுக்கு வசதியும்

ஏற்படுவதாகத் தோன்றகிறது. அது ஏன்? இந்தக் கருத்தினால் நன்மையில் உள்ள

நம்பிக்கையின் பலம் குறைந்து விடாதா?" என்று கேட்கிறார் டி.எஸ். நாராயணசாமி.

"கஷ்டப்படுகிறவர்கள் இரண்டு இடத்திலுமே இருக்கிறார்கள்.

கஷ்டத்தையோ, சுகத்தையோ, கொடுப்பது அவர்களுடைய இந்த ஜன்ம வினைகள்

அல்ல. முந்தைய ஜன்மத்தின் கர்ம வினைகள் அவை. அதற்கும் கடவுளுக்கும்

சம்பந்தமே கிடையாது. கடவுள் நமக்கக் கஷ்டத்தைக் கொடுப்பார் என்ற எண்ணம்

ஏற்பட்டுவிட்டால், அப்புறம் நாம் அவரை வணங்கவே மாட்டோம். நாம் கடவுளை

வணங்கக் கோயிலுக்குச் செல்லுகிறோம். அங்கே போய், 'கடவுளே எனக்கு ஏன்

இவ்வளவு கஷ்டத்தைக் கொடுத்தாய்?' என்று ஆண்டவனைக் கேட்கலாமா?

அப்படிக் கேட்பது நம்முடைய அறியாமையே அல்லவா? மின்சாரம் இருக்கிறது.

அது நமக்கு ஒளியைக் கொடுக்கிறது. சூட்டை உற்பத்தி செய்து அளிக்கிறது.

ஆனால், அதை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் 'ஷாக்'

அடிக்கிறது. அதற்காக மின்சாரத்தைக் குறை சொல்ல முடியுமோ? அதே

மாதிரிதான் நமக்குச் சில சமயம் கஷ்டம் ஏற்படுவதும்!அதற்காகக் கடவுளை

நிந்தனை செய்யக்கூடாது!"

"மகாபாரதத்தில் பல சம்பவங்கள் அதர்மமாகவே அமைந்திருக்கின்றன.

அதர்மத்தை வைத்துத்தான் அதர்மத்தைச் சமாளிக்க வேண்டும் என்ற எண்ணம்

அவற்றைப் படிக்கும் போது ஏற்படுகிறது. உதாரணமாக அர்ஜுனன் பீஷ்மரைக்

கொல்வது, கர்ணனைக் கொல்வது போன்றவை..." என்று கேட்கிறார் ஜனார்த்தனம்.

"மகாபாரதம் ஒரு காவியம். அதில் நடக்கும் சம்பவங்களுக்குப் பகவானே

சாட்சியாக இருக்கிறார். அவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தப்புக்

காரியங்களைச் செய்யக்கூடாது. ஒவ்வொரு சம்பவத்துக்கும் பின்னால் ஒவ்வொரு

தர்ம லட்சியமும் இருக்கிறது. அதன் படி தான் நடக்கும். நமக்குப் புரியவில்லை

என்பதனால், அது தர்மம் இல்லை என்று முடிவு கட்டி விடக்கூடாது".

"மகாபாரதக் கதையைப் பற்றிக் குறிப்பிடும்போது எனக்குக் கலைஞர்

கருணாநிதி கேட்ட கேள்விதான் கவனத்துக்கு வருகிறது. பல தர்மங்களைச்

செய்துள்ள கர்ணனின் உயிர் பிரியாமல், தர்மதேவதை அவனைக் காப்பாற்றும்

போது, கண்ணன் கிழவன் வேடத்தில் போய் அந்தத் தர்ம கவசத்தையே தானமாக

வாங்கிக் கொண்டு விடுகிறார். இது தானத்திலேயே மிகச்சிறந்த தானம் அல்லவா?

அதர்மத்தின் பலனையே அல்லவா தானம் செய்து விடுகிறான்? அப்படி இருக்க,

இது எப்படி அவனைக் கைவிட்டுவிட முடியும்? அப்படிப்பட்ட கர்ணனை எப்படி

வெல்ல முடியும்?" என்று நான் கேட்கிறேன்.

"தர்மங்கள் பல செய்துள்ள போதும், கர்ணன் அந்தக் குறிப்பிட்ட தர்மத்தை

மட்டும்,யார்வந்து யாசிக்கிறார்கள் என்று தெரிந்தேதான் கொடுத்தான், வஞ்சகமாகக்

கேட்கப்பட்ட அந்தத் தர்மத்தைக் கண்ணனே யாசகம் கேட்க வந்திருப்பதை

அறிந்தான், கர்ணன் தானம் செய்கிறான். அந்த தானத்தைப் பண்ணும்போது

மட்டும் வெறுப்புடன் தான் செய்கிறான். எந்தத் தர்மம் ஆத்மார்த்தமாகச்

செயய்ப்படவில்லையோ, அதற்குப் பயன் கிடையாது."

"பிராமணர்கள் மற்ற ஜாதிக்காரர்களை வணங்கக்கூடாதா? என்ற நான்

கேட்கிறேன்.

"ஒருவரை நாம் வணங்கி ஆசி பெற்றபோது, நமது பாவங்கள் அவரைச்

சாரும் என்பது முறை. அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய பலமும் உயர்வும் அவருக்கு

இருக்க வேண்டும். அவர்கள் கூறும் ஆசியில் நமக்குப் பலம் ஏறும். அப்படி ஆசி

கூறும் தகுதி அவர்களுக்கு இருக்க வேண்டம். அப்படிப்பட்ட உயர்வும்,

மேன்மையும், தகுதியும் இல்லாதவர்களை நாம் வணங்குவதால் பயனில்லை என்று

தான் சாஸ்திரம் கூறுகிறது. அப்படிப்பட்டத் தகுதியுடன் ஆசிகூற முடியாதவரை -

அவர் தகப்பானாராகாவே இருந்துவிட்டாலும் கூட - வணங்கக்கூடாது.

அந்தத் தகுதி இருந்தால் யாரும் யாரையும் வணங்கலாம். இதில் ஜாதி பேதம்

இல்லை!"

"வரதட்சிணை விஷயத்தில் அப்பாவை எதிர்க்கலாம்' என்று பெரியவர்கள்

சொல்லி இருக்கிறீர்களாமே? அது உண்மையா?

"உண்மைதான். ஒரு பெண் மற்ற எல்லா விஷயங்களிலும் பெற்றோர்

சொல்வதைக் கேட்டு, கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதுதான் கடமை. ஆனால்

இந்த விஷயத்தில் மட்டும் அப்படிக் கேட்க வேண்டாம் என்று கூறி இருக்கிறேன்.

முக்கியமாக இதைப் பையன்களை விட பெண்களிடமே அதிகமாகக் கூறி

வருகிறேன். 'உங்கள் தந்தை உங்களை மணம் செய்து வைக்கும் போது பட்ட

கஷ்டங்களை மனத்தில் வைத்துக் கொண்டு, உங்கள் மகளுக்கு வரதட்சிணை

வாங்காத பையனுக்கு, மடத்திலிருந்து, ஒரு சர்டிபிகேட்டும், ஒரு வெள்ளிகாசும்,

விசேஷப் பிரசாதமும் அளித்து ஊக்குவிக்கிறோம்," என்கிறார் சுவாமிகள்.

"இனிமேல் பெண்கள் நகைகளே போட்டுக் கொள்ளக்கூடாது' என்று ஓர்

இயக்கத்தை 'மயன்' பத்திரிகை தொடங்க இருக்கிறோம்" என்கிறேன் நான்.

"கொலை கொள்ளையாவது நாட்டில் குறையும்!" என்று கூறிச் சிரிக்கிறார்

சுவாமிகள்.

"உணவைப் பொறுத்து நம்முடைய குணங்களும் அடைய முடியுமா? மாமிச

உணவு சாப்பிடுவது தவறாகுமா?" என்று கேட்கிறார் ஜனார்த்தனம்?

"உண்ணும் உணவை வைத்துத்தான் மனிதனின் உணர்வுகள் வளர்கின்றன.

அதாவது காரமில்லாததும் அதிகப் புளிப்பில்லாததும், இனிப்பாக உள்ளதுமான

சாத்வீகமான உணவை உட்கொள்வதால் நல்லுணர்ச்சிகள் உண்டாகின்றன. மாமிச

உணவை நம் நாட்டில் இப்படிச் சாப்பிட முடியாது. அதிகக் காரணமான உணவை

உட்கொள்வதானால் ராஜஸமான, கோப - தாப உறவுகள் பெருகுகின்றன. அதிகப்

புளிப்புகள் உணவைச்சாப்பிடுவதனால், தாமஸமான தூக்கம் முதலியவை ஏற்படும்.

ஆகவே நாம் உட்கொள்ளும் உணவு, சாத்வீகமான முறையில் இருந்தால் நமக்கு

நல்லது. நம்மைச் சார்ந்தவர்களுக்கும் நல்லது?.

"நிறைய ஜாதிகள் இருக்கின்றனவே? இந்து மதத்தில் இதற்குச் சம்மதம்

உண்டா? பல ஜாதிகளுக்கிடையே பல பிரிவுகள் இருப்பது ஒருபலவீனம் என்றே

கருதுகிறேன். இதுபற்றித் தங்பள கருத்தைத் தெரிந்து கொள்ளலாமா என்றே

கேட்கிறேன் நான்.

"இந்த உட்பிரிவுகள் கிராமத்தில்தான் அதிகம். ஒவ்வொரு ஜாதிக்காரரும் ஒரு

கோயலிக் கட்டி வைத்திருப்பார்கள். ஆனால் ,உற்சவம் என்று வந்து விட்டால்,

எல்லோருமே ஒன்றாகக் கலந்து கொள்வதுதான் வழக்கம். இந்தக் காலத்தில் மக்கள்

ஜாதியை - ஜாதி உட்பிரிவுகளைக் கூட - பாராட்டுவது சங்கத்தில் கிடைக்கும்

சலுகைகளுக்காகவும் சௌகர்யத்துக்காகவும் மட்டும்தான் இருக்கிறது? எல்லோரும்

இந்துக்களே என்ற உணர்வு ஏற்பட்டுவிட்டால் போதும். இந்து கடவுளரின் பெயர்

வைத்துக்கொண்டிருக்கும் அனைவரும் இந்துக்களே, இதில் வேறுபாட எதுவும்

கிடையாது. அக்காலத்தில் ஜாதிப்பிரிவுகள், அவரவர் தொழிலை அவர் வாழும்

முறையை அனுசரித்து அமைக்கப்பட்டது. இப்போபது அப்படியே யாரும்

பின்பற்றுவதில்லை. சில சௌகரியங்களை அடைவதற்கு வழியாகவே இதைப்

பின்பற்றுகிறார்கள். காலப்போக்கில் தானாகவே சரியாகிவிடும்" என்று கூறி

புன்முறுவல் செய்கிறார் சுவாமிகள்.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is த்து       பசுக்களைப் பராமரித்துப் போற்றினால் நாடும் வீடும் நலம் பெறும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  வாழ்க்கை முறையை நமது மதம் கற்றுக் கொடுக்கிறது
Next