இந்த உலகம் எப்பொழுதும், யாரால் படைக்கப் பட்டதென்று இன்னும்
நிர்ணியக்கப்படவில்லை. ஆகவே அநாதி காலந்தொட்டு உலகம் இருந்து
வருவதாகச் சொல்கிறார்கள். இந்த மாபெரும் உலகைப் படைப்பதற்கு ஒரு
மாபெரும் சக்தி காரணமாக இருந்திருக்க வேண்டும். இதை வைத்துத் தான் ஸ்ரீ
ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தர்யலஹரி என்னும் நூலில், "சக்தி இல்லாமல்
இந்த உலகில் ஒரு துரும்பைக் கூட அசைப்பதற்குச் சிவன் போன்றவர்களால் கூட
முடியாது," என்று கூறுகிறார்.
பராசக்தி லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி என்ற பெயர்களோடு மூன்று சக்திகளாக
விளங்குகிறாள். அவற்றுள் சரஸ்வதிதேவி பிரம்மவித்யாரூபிணியாக எப்பொழுதும்
ஒரே வடிவத்தில் விளங்குகிறாள். ஸ்ரீ மஹாவிஷ்ணுவிற்கு எப்படிப் பல
அவதாரங்களோ அதுபோல் ஸ்ரீ மஹாலக்ஷ்மியும் பல அவதாரங்கள்
எடுத்துள்ளாள். பரமேஸ்வரன் எப்பொழுதும் ஒரே நிலையில் இருக்கிறார்.
அவதாரங்கள் எடுக்கவில்லை. ஆனால் பார்வதி தக்ஷனுக்குப் பெண்ணாக ஒரு
முறையும், ஹிமவானுக்குப் பெண்ணாக ஒரு முறையும் வந்ததாகக் கூறப்படுகிறது.
உலகில் தம்பதிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பார்வதி - பரமேஸ்வரனையும், லக்ஷ்மி
- நாராயணனையும் குறிப்பிடுவார்கள். இதை வைத்துத்தான் நமது வீடுகளிலே
திருமணம் நடக்கும்போது, "கௌரீ கல்யாணம் வைபோகமே, சீதா கல்யாணம்
வைபோகமே" என்று பாடுவார்கள்.
ஹிந்து மதத்தில் தத்துவ ரீதியாக நிர்குண, நிராதார, அகண்ட, சச்சிதானந்த
பரம்பொருள் ஒன்றுதான் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பரம்பொருளை
அடைவதற்கும், உலகில் நடப்பைச் சொல்வதற்கும், உருவ வழிபாட்டையும் அநாதி
காலந்தொட்டு ஹிந்து சமம் ஏற்றுக் கொண்டுள்ளது. முருகனைப் பற்றி பாடும்
போது கூட,
அருவமும், உருவவுமாகி, அனாதியாய், பலவாய்,
ஒன்றாய், ப்ரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பதோர்,
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் உதித்தாங்கினன் உலகம் உய்ய,
என்ற பாடப்பட்டுள்ளது.
¢ பொதுவாகச் சக்திக்க உருவம் கிடையாது. சக்தியைத் தாங்கி நிற்பதற்கு ஓர்
உருவம் வேண்டும். மின் சக்தி இருக்கிறது. அதற்கு மின் கம்பி (ஒயர்)
தேவைப்படுகிறது. அதுபோலத்தான் நம் உடலிலும் நடக்கும் சக்தி, பார்க்கும் சக்தி,
கேட்கும் சக்தி, சிந்திக்கும் சக்தி இப்படிப் பல வகையான சக்திகள் உள்ளன.
அந்தச் சக்திகளின் வண்ணமும், வடிவமும் என்ன? என்று விஞ்ஞானியும்
இதுவரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் அந்தச் சக்திகளுக்கு ஆதாரமான
உறுப்புக்கள் உடலில் உள்ளன. அதுபோலத்தான் பராசக்தியின் வடிவத்திற்கு எந்த
விதமான வண்ணமும், பெயரும் கிடையாது. உலக நன்மைக்காக உருவமெடுத்து
அருள் பாலித்துக் கொண்டிருக்கிறாள். இப்படி ஒரு சமயம் தக்ஷனின் புத்திரியாகப்
பிறந்த பரமேஸ்வரனை மணந்தாள். அப்பொழுது அவளுக்கு தாக்ஷ£யாணி என்று
பெயர்.
ஒரு சமயம் தக்ஷன் பெரிய வேள்வி செய்தான். அந்த வேள்வியைக் காணத்
தான் செல்ல வேண்டுமெனப் பரமேஸ்வரனிடம் அனுமதி கேட்டாள்.
பரமேஸ்வரன் அந்த நேரத்தில் தியானத்தினால் ஆலோசித்து,
"இந்த வேள்வியில் என்னுடைய அம்சமாக உள்ள ருத்திரனுக்கு ஹவிர்
பாகம் இல்லாமல் இந்த யாகம் நடத்த உள்ளனர். ஆகவே, என்னை
அவமதிப்பதற்காகவே இந்த யாகம் நடத்தப்படுவதால் c செல்ல வேண்டாம்",
என்று சொல்கிறார். அப்பொழுது தன்னுடைய தகப்பானரையும், அங்கு வர
இருக்கும் உறவினர்களின் கூட்டத்தையும் காணும் ஆர்வம் மேலிட்டதினால்
பரமேஸ்வரனுடைய சொல்லுக்கு மறுப்பாக, தன்னடைய தகப்பானர் செய்யும்
வேள்வியின் பொருட்டு வரும் அனைவரையும் பார்க்க வேண்டுமென்று,
வற்புறுத்தி விட்டு அனுமதியை எதிர்பார்க்காமல், பிறந்த வீட்டுப் பாசத்தின் மேல்
தகப்பனார் வீட்டிற்குச் செல்கிறாள். தக்ஷன் வேள்விக்கான ஏற்பாடுகளைச் செய்து
வேள்வியைத் தொடங்குகிறான்.
தாக்ஷ£யணியை எவரும் விசேஷமாகக் கவனிக்கவில்லை. வேள்வியில்
ரிஷிகளெல்லாம் பரமேஸ்வரனுக்குச் சமமான ருத்திரனுக்கு ஹவிர்பாகம் கொடுக்க
வேண்டும் என்று தக்ஷனிடம் சொன்னதற்கு. தக்ஷன் அகங்காரத்துடன்,
"என்னுடைய மாப்பிள்ளை பரமேஸ்வரன் இந்த வேள்விக்கு வந்திருக்க வேண்டும்.
அகங்காரத்துடன் இருக்கும் பரமேஸ்வரனுக்குச் சமமான ருத்திரனுக்கு இங்கு
ஹவிர்பாகம் கிடையாது," என்று சொல்லி பரமேஸ்வரனை மேலும் பல வகையில்
நிந்தனை செய்கிறார்.
அந்தப் பரமேஸ்வரனை நிந்தனை செய்த வார்த்தைகளைக் கேட்ட
தாக்ஷ£யணி காது கொடுத்துக் கேட்க முடியாமல் தக்ஷன் செய்த வேள்வியிலேயே
தன்னுடைய உடலை மாய்த்துக் கொண்டு விட்டாள். அப்பொழுது
பரமேஸ்வரனுக்கு விவரம் தெரிந்து, வீரபத்திரர் தோன்றி தக்ஷனுக்கும் தகுந்த
சி¬க்ஷ அளித்ததாக வரலாறு. இந்தக கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள
வேண்டிய உண்மைகள்.
1. பதி சொல்லைத் தட்டாமல் நடக்க வேண்டும்.
2. பதியைப் பற்றி நம் காதில் விழும்படி குறை கூறினாலோ, நிந்தனை
செதர்லோ, அதைப் பொறுத்துக் கொண்டு அங்கே« இருக்கக்கூடாது. வேறு
இடத்திற்கு ஒதுங்கிப் போய்விட வேண்டும்.
3. காளிதாசன் என்னும் பெரிய கவி தாக்ஷ£யணியானவள் பரமேஸ்வரனின்
நிந்தனையைக் கேட்டு நெருப்பில் விழுந்த நிலையை "சதி" என்ற சொல்லை
உபயோகப்படுத்துகிறார். தற்காலத்தில் கணவன் இறந்த பிறகு உடன்கட்டை
ஏறுவதை சதி" என்று சொல்லி விவாதத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.
உண்மையான குடும்பப் பெண்ணானவள் தன்னுடைய பதியின் மீது எந்தவித
அவச்சொல் ஏற்பட்டாலும், அதைக் காது கொடுத்துக் கேட்கக் கூடாது என்பதுதான்
நிலை. குடும்பப் பெண் கணவனிடம் எப்படியிருக்க வேண்டுமென்று cF நூல்
கூறுகிறது.
கார்யேஷ§ தாசீ கரணேஷ§ மந்த்ரீ
ரூபேஷ§ லக்ஷ்மீ க்ஷமா தரித்ரீ
ஸ்நேஹே ச மாதா சயனேது வேஸ்யா
ஷட்தர்ம யுக்தா குலதர்ம பத்னீ
பணிவிடை செவ்தில் வேலைக்காரியாகவும், ஆலோசனை கூறுவதில்
அமைச்சராகவும், அழகில் லக்ஷ்மியாகவும், பொறுமையில் பூமாதேவியாகவும்,
பள்ளியரையில் வேசியாகவும், விளங்குபவளே குலப் பெண்ணாவாள்.
இப்படி உலகில் குடும்பப் பெண் கணவனோடு இரு சரீரங்களுடன் ஒரு
மனத்துடன் வாழ வேண்டும்.