உலகின் ஆரம்ப மதம்

உலகின் ஆரம்ப மதம்

மதம் என்றால் சம்மதம் என்று பொருள். உலகம் தோன்றின காலம் முதல்,

மக்கள் தங்களுடைய நல்வாழ்வுக்காக ஒருவரைத் தேர்ந்து எடுத்துக் கொண்டனர்.

அவரைத் தங்கள் உலக வாழ்வுக்கு நாயகராக, வழி காட்டியாக எடுத்துக் கொண்டு,

அவருக்க சம்மதமான வழியில் மக்கள் எல்லோரும் நடந்து வந்திருக்கிறார்கள்.

அவ்வப்போது, கால தேசங்களுக்கேற்றவாறு தாங்கள் செய்த செய்வினையின்

பயனாலும், மதம், மாத்சர்யம், பேராசை போன்ற தீய குணங்களால்

ஆக்ரமிக்கப்பட்டு அப்பா, பிள்ளை, அண்ணன், தம்பி போன்ற நெருங்கிய

உறவினில் கூட சண்டைகள் ஏற்பட்டு, ராஜ்யங்கள் எல்லாம் அழிந்த வரலாறுகள்

உண்டு.

மதம் ஒருவனை நல்வழிப்படுத்துவதற்காகத் தான் ஏற்பட்டது. ஆனால், கால,

தேச, சூழ் நிலைகள் மாறும்பொழுது பிரச்சினைகளும் அதிகமாகி மதமே,

மனிதனையும் அழித்துவிட்ட வரலாறும் உண்டு. ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு

முயலும் போது அந்தப் பிரச்சினை முடிவடைந்து, மற்றொரு பிரச்சினை

உருவாகிறது. இப்படித்தான், பல மதக்ஙள் இன்று தோன்றியுள்ளன.

ஆகவே, மக்களுடைய வாழ்க்கையில், மதம் தவிர்க்க முடியாத ஒன்றாக

ஆகிவிடுகிறது. மதமில்லாமல் மனிதன் இல்லை. இப்படி உலகம் தோன்றின காலம்

முதல் உலகமெல்லாம், ஏதாவதொரு மதத்துடன் தான் இயங்கிக்கொண்டு

வருகிறது. தற்பொழுது, நாட்டில் தோன்றி மனதக்ஙள் எலாம், உலகம் தோன்றின

காலம் முதல் இருப்பதாக ஒன்றும் சொல்ல முடியாது. வரலாறுகளே, ஒவ்வொரு

மதத்திற்கும் காலங்களை வகுத்து விட்டன. ஆகவே தற்போதுள்ள மதங்கள்

நாட்டில் தோன்றுவதற்கு முன்பும், இப்பொழுது வந்துள்ள மதங்களுக்குப் பின்பும்,

தொடர்ந்து உலகம் தோன்றின காலம் முதல் ஒரு மதமும் இருந்து வருகிறது

என்பதை சரித்திர வாயிலாக அறிகிறோம். அந்த மதம்தான், உலகம் தோன்றின

காலம் முதல் இருந்து கொண்டு, தற்பொழுது பாரத நாட்டில் மாத்திரம் இருந்து

வருகிறதான, "வைதிக சனாதன இந்து தர்மம்".


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is பெண்மணிகள் தெரிந்துகொள்ள - 11
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  வேதமே ஆதாரம்
Next