கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது தமிழ்ப் பழமொழி. கோயல் என்றால் ஸ்வாமி, ஸ்தல விருக்ஷம், தீர்த்தம் மூன்றம் உடையது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பாடல் பெற்ற க்ஷேத்திரங்கள்விசேஷமாக சொல்லப்படுகிறது. அதேபோல வைஷ்ணவ க்ஷேத்திரங்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட க்ஷேத்திரங்கள் என்று விசேஷமாக சொல்லப்படுகிறது. அரசரால் கட்டப்பட்ட கோவில்கள் சிறப்பு வாய்ந்தவைகளாகச் சொல்லப்படுகின்றன. சித்த புருஷர்கள், மற்றும் மஹான்களால் அருள் பெற்று அதனால் சிறப்பு பெற்றவை பல உள்ளன. கிராம, நகரங்களில் சக்தி வழிபாடாக, குல தெய்வமாக வழிபடும் சில கோவில்கள் சிறப்புப்பெற்று உள்ளன. இப்படியாகக்ஷேத்திரங்கள் கோவில்கள், மூர்த்தங்கள் பலவழிகளில் சிறப்புற்று விளங்குகின்றன.
சில கோவில்களில் இறைவனின் சக்தி பொதுமக்களுக்கு அருள்பாலிக்கிறது. இது விசேஷமாக மிளிர்கின்றன. ஒவ்வொரு கோவிலிலும் பலவித சான்றுகள், கல்வெட்டுகள் போன்றவைகள் சரித்திரம் சொல்லும். இப்படி பல வழிகளில் சிறப்புற்று விளங்கும் தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் உள்ள ஆலயங்களைப் பற்றிய வரலாற்றை - குறிப்பாக இத்தீபாவளி நன்னாளில் திருவிடைமருதூர் மற்றும் அதன் பரிவார க்ஷேத்திரங்கள் பற்றி விளக்கப் படங்களுடன் வெளிவரும் மங்கை இதழ் ஆலய சிறப்பு மலராக வெளியிடுவதைக் கண்டு சந்தோஷிக்கிறோம்.
இதேபோல, பொதுமக்களுக்கு நல்ல விஷயங்களை தெரியப்படுத்திக் கொண்டு சிறப்புற விளங்க வேண்டும் என்று ஆசீர்வதிக்கிறோம்,