"மங்கை""க்கு வழங்கிய ஆசி செய்தி
தீப ஒளியினால் பக்கத்தில் உள்ள பொருள்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் குருடனாக இருந்தால் தீப ஒளியில் அவனால் என்தப் பொருளையும் பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. கண் ஒளி மாத்திரம் இருந்தாலும் இருட்டில் பொருள்கள் ஒன்றும் தெரியாது.
ஆகவே ஒரு பொருளை அறிய கண் ஒளி தீப ஒளி இரண்டும் தேவையானது. இப்படிக் கண் ஒளி தீப ஒளி மூலம் பார்த்தால் அதன் வடிவம், கலர் தெரியுமே தவிர எடை தெரியாது. அந்தப் பொருளின் எடையை அறிய கையில் எடுத்துப் பார்த்தால் அதன் மூலம் எடையை அறிய முடியும்.
கையினால் எடுத்த பொருளின் எடையைப் பார்த்தாலும் அந்தப் பொருளின் ருசி என்ற அறியாமை நம்மிடையே இருக்கிறது. அந்தப் பொருளை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் ருசியின் தன்மை அறிந்து ருசியின் தன்மை அறிந்து ருசியின் அறியாமை அகலுகிறது.
இப்படி ஒவ்வொரு பொருளின் தன்மையிலும் பலவிதமான அறியாமைகள் நம்மிடையே இருக்கின்றன, ஒவ்வொரு அறியாமையும் அகல ஒவ்வொரு விதமான முயற்சியை நாம் செய்ய வேண்டும்,
உலகில் உள்ள அறியாமை இவ்வளவும் அகல வேண்டுமானால்,
இத்தனைக்கும் காரணமான கடவுள் மாயை அறியாமை அகல வேண்டும்.
இந்த அஞ்ஞானம் அகல கண்ணபிரான் கீதையில் உபதேசித்த ஆன்மீக ஞானஒளி பேரறிவின் ஒளி நமக்கு கிட்ட வேண்டும்.
இந்த ஒளியில்தான் ""ஞானதீபேன பாஸ்வதா""என்று கண்ணபிரான் கீதையில் கூறுகிறார்.
கண்ணபிரானால் தோற்றுவிக்கப்பட்ட தீபாவளித் திருநாளில் கண்ணபிரான் உபதேசித்தப்படி ஞான தீபத்தை ஒவ்வொருவரின் உள்ளத்தில் ஏற்றிக்கொண்டு அறியாமை இருள் அகல கண்ணபிரானைப் பிரார்த்திப்போமாக.