புத்தாண்டு அருளாசியும் புண்ணிய காலங்களும்

புத்தாண்டு அருளாசியும் புண்ணிய காலங்களும்

ஒவ்வொரு வருடத்திற்கும், ஒவ்வொரு மாதத்திற்கும், ஒவ்வொரு

கிழமைக்கும் கூட அர்தத்தோடு பெயர் வரும். மொத்தம் அறுபது தமிழ்

வருஷங்கள். ஒவ்வொரு வருஷத்திற்கும் பெயர் மாறி மாறி வரும். இந்த

ஆண்டிற்கு பவ என்றம் பாவ என்றும் இரண்டு வகையாகச் சொல்கிறார்கள்.

பரமேஸ்வரனின் பெயரில் முதல் பெயர் பவ என்றம் பவாய தேவாய நம:

என்றும் சொல்வார்கள். பவ என்றால் உற்பத்தி என்று பொருள். (உத்பவ என்பது

போல்) பலவித சுக துக்கங்கள் தோன்றவதற்கு காரணமாக காலத்தைக்

குறிப்பிடுவார்கள்.

நக்ஷத்திரத்தை வைத்து வருவது மாதத்தின் பெயர். சித்திரை நக்ஷத்திரத்தை

வைத்து வருவது சித்திரை மாதம் என்பர். கிரகங்களில் ராகு, கேது தவிர மற்ற ஏழு

கிரகங்களை வைத்து கிழமைகள் பெயர் குறிப்பிடப்படுகிறது. வெளி இருள்

(அறியாமை) அகலுவதற்கு ஒளி இன்றியமையாதது. அந்த ஒளியைக் கொடுப்பவர்

சூரியன். அந்த சூரியனே தான் ஆன்மிக ஒளியைக் கொடுக்கும்

பரப்பிரும்மமாகவும் "அஸெள ஆதித்யோ ப்ரும்ம" என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆகவே வருகிற புத்தாண்டு தினத்தில் நல்லவை தோன்றுவதற்கும், தீயவை

அகலுவதற்கும், அறியாமை போவதற்கும் உதவிகரமாய் விளங்கக் 'கண்கண்ட

தெய்வமான சூரிய தேவனை பிரார்த்தித்து ஆசி பெறுவோமாக.

புண்ணிய காலங்கள்

புண்ணிய பூமியான நமது பாரத தேசத்தில் அவ்வப்பொழுது வெவ்வேறு

நிமித்தங்களால் புண்ணிய காலங்கள் நிகழ்கின்றன. இவைகள் தர்ம சாஸ்திரங்கள்

அறிந்தவர்களால் நிர்ணியிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வருஷமும்

பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சில சமயம் புண்ணியகாலத்தோடு

பண்டிகைகளும் நிகழும். உதாரணமாக சித்திரை மாதம் முதல் தேதி, தமிழ்

வருஷம் பிறக்கும்போது சைத்ர விஷ§வ புண்ணியகாலம் என்பர். அன்று

ஆற்றில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து தானமும் செய்வார்கள். அன்று

வருஷப் பிறப்பு பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல் ஐப்பசி

மாதம் பிறப்பு துலா விஷ§வ புண்ணிய காலம் எனப்படும்.

ஆடி மாதப்பிறப்பின்போது தக்ஷிணாயன புணணியகாலம். ஆடிப்பண்டிகை

என்ற கொண்டாடுகிறார்கள். புதிதாகக் கல்யாணம் ஆன தம்பதிகளைப் பெண்

வீட்டார் அழைத்து விருந்துபசாரம் செய்கிறார்கள்.

அப்படியே தை மாதப் பிறப்பன்று உத்தராயண புண்ணயிகாலம் - மகர

சங்கராந்தி என்பார்கள் அன்று சூரிய பகவானுக்குப் பூஜை செய்து பொங்கல்

பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதப்பிறப்பும், ஒவ்வொரு அமாவாசையும்

புண்ணியகாலமாகவே கருதப்படுகின்றன. அன்று தர்ப்பணாதிகள் செய்வதால்

பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்தீரம் கூறுகிறது. ஆடீ

அமாவாசை, தை அமாவாசை இந்நாட்களில் சமூத்ரஸ்னானம் செய்து சக்திக்குத்

தக்கவாறு தானம் செய்தால், அனந்த பலம் கிடைக்கும் என்பார்கள். வடக்கே, தை

அமாவாசை என்று அதை மிகவும் புனிதமாகக் கருதி லக்ஷக்கணக்கானவர்கள்

கங்கையிலும். யமுனையிலும் ஸ்நாநம் செய்கிறார்கள்

இவைகளைத் தவிர குறீப்பிட்ட திதிகளும், நக்ஷத்ரங்களும் யோகங்களும்

சேரும்போது அந்த சேர்க்கைக்குத் தகுந்தாற்போல் வயதீபாதம், அர்த்தொதயம்

மஹொதயம் என்ற புண்ணிய காலங்கள் சம்பவிக்கும். இவைகளில் பின் இரண்டும்

சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நேரிடுவதுபோல அபூர்வமாகத்தான்

சம்பவிக்கும். அந்நாட்களில் மகாநதிகளிலோ, சமுத்திரத்திலோ ஸ்நானம் பண்ணி,

முடிந்த தானங்களைச் செய்வது நற்கதி கிடைக்க ஓர் உபாயமாகக் கருதப்படுகிறது.

சில திதிகளில் சில கிழமைகளோ யோகங்களோ சேர்த்தால் அவை

புண்ணிய காலமெனக் கருதப்படும்.

திங்கட்கிழமை காலையில் அமாவாசை இருந்தால் அன்று அமாசோமவாரம்

என்பார்கள். அன்று மரங்களுக்குள் சிறந்ததாகக் கருதப்டும் அரசமரத்தை

அபிஷேகம் பண்ணி, அலங்கரித்து, பூஜித்து, 108 முறை வலம் வந்தால் மிகப்

புண்ணியம் என்பார்கள். முக்கியமாக மகட்பேறு இல்லாதவர்கள் இப்படிச் செய்தால்

புத்ரபாக்கியம் கிட்டும் எனக்கூறுவர். அரசின் அடிபாகத்தில் பிரம்மதேவனும்,

நடுமரத்தில் விஷ்ணுவும், நுனியில சிவனும் இருப்பதாக ஐதீகம்.

ஒவ்வொரு அமாவாசைக்கு மறுநாள் முதல் பதினைந்து நாட்கள் வளர்பிறை

எனப்படும். பௌர்ணமிக்கு மறுநாள் முதல் அமாவாசை வரை தேய்பிறை

என்பார்கள். அமாவாசை அன்று பித்ருதினம் எனக்கருதி தர்ப்பணம்

செய்கிறார்கள். வளர்பிறை (சுக்லபக்ஷம்) நாட்களில்தான் சுபகாரியங்கள்

செய்யப்படுகின்றன. பௌர்ணமி சந்திரனைக் கண்டு சமுத்திரம் அலை மோதப்

பொங்கி எழுவதைப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு

மறுநாள் ப்ரதமை. அன்று சாஸ்த்ரமானப்படி மாதப் பிறப்பு. ஆந்திரா கர்நாடகா

மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கர்கள், கன்னடியர்கள் இதை

அனுசரிக்கிறார்கள். சூரியன் அடுத்த ராசியில் பிரவேசிக்கும் போது

சௌரமானப்படி மாதப்பிறப்பு. இது தமிழ்நாடு, கேரளம் முதலான மாகாணங்களில்

அனுசரிக்கப்படுகிறது. இதே போல் ஸாவம், நக்ஷத்திரம், பார்ஹஸ்பத்யம்

என்றெல்லாம் மாதப்பிறப்பு வழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது.


Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is காரடையான நோன்பு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஞான மலர்கள்  is  அன்னம் சுத்தமானால் எண்ணம் சுத்தமாகும்
Next