இயற்கை விதிகளுக்குப் பிடிபடாத வித்யைகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நமக்குத் தெரிகிற natural forces-ஐ (இயற்கை சக்திகளை)க் கொண்டே ஏற்பட்ட சாஸ்திரங்களைத் தவிர நாம் அறிந்த natural laws-ல் (இயற்கை விதிகளில்) பிடிபடாத பல சாஸ்திரங்களும் இருந்திருக்கின்றன. அதெல்லாம் ‘ஹம்பக்’ என்று இப்போது ஒதுக்குகிறார்கள். அப்படிப் பண்ணாமல் அவற்றையும் படித்து, ப்ராக்டிகலாகப் பண்ணிப் பார்த்து, ‘ஹம்பக்’கா இல்லையா என்று ரூபிக்கவேண்டும். என் அபிப்ராயம், இந்த சாஸ்திரங்களை ப்ராக்டீஸ் செய்யும் மநுஷ்யர்களில் ஹம்பக்குகள் இருக்கலாமேயொழிய, சாஸ்திரமே ஹம்பக் இல்லை என்பதுதான். நாடி சாஸ்திரம், ப்ரச்னம் என்று கேட்கிறார்களே அந்த சாஸ்திரம், சாயாபுருஷ சாஸ்திரம் என்று நிழலை வைத்து முடிவுகள் செய்ய ஏற்பட்ட சாஸ்திரம் முதலானவை இப்படிப்பட்டனவே.

புது ஸயன்ஸ் நம் பழைய ஸயன்ஸை அடியோடு அடித்துக்கொண்டு போய்விட்டதுபோல் இல்லாமல், “unscientific” என்று தற்போது பரிஹஸிக்கிற, ஆனால் super-sciences ஆக (ஸயன்ஸுக்கு மேற்பட்டனவாக) இருக்கக்கூடிய இந்த நாடி சாஸ்திரம் முதலானவற்றைப் பாரம்பர்யமாக அறிந்து ப்ராக்டிஸ் செய்பவர்கள் ஏதோ சிலர் இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்களையும் ஆதரித்து, இவர்களுக்கு சிஷ்யப் பிள்ளைகள் சேர்த்துக் கொடுத்து வித்யாரக்ஷணம் செய்யவேண்டும். ரஸவாத சாஸ்திரம், ஜ்யோதிஷம் ஆகியன ஸயன்ஸ், ஸயன்ஸில் வராதவை ஆகிய இரண்டும் கலந்தனவாக “ஸெமி-ஸயன்ஸ்” என்னும்படி இருக்கின்றன. இவற்றையும் இதுவரை சொன்னாற்போல் வ்ருத்தி பண்ணவேண்டும். தனியாகப் பல ஜோஸ்யர்கள் இப்போதும் நல்ல செல்வம் செல்வாக்கோடு இருப்பது வேறு விஷயம். நான் சொல்வது ஜ்யோதிஷ வித்யையின் ரக்ஷணம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆசிரியர்களையும் உண்டாக்கவேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வைத்ய சாஸ்த்ரம்
Next