‘தியரி’ மட்டும், ப்ராக்டிஸ்’ இல்லை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

நான் ரஸவாத சாஸ்திரம் பற்றிச் சொன்னதைக்கூட இப்படித்தான் எடுத்துக்கொண்டு நடத்தவேண்டும். இல்லாவிட்டால் அதைப் படிக்கிற பலர் பித்தளையை தங்கமாக்குகிறேன் என்று புறப்பட்டு அநேக பித்தலாட்டங்களுக்கு இடம் கொடுத்துப்போகும். (‘பித்தலாட்டம்’ என்ற வார்த்தையே ரஸவாத ஏமாற்றில் உண்டானதுதான். ‘பித்தல’வும் ‘ஹாடக’மும் சேர்ந்து ‘பித்தலாட்டம்’. பித்தலம் தான் பித்தளை. ஹாடகம் என்றால் தங்கம்.) “இதுவும் ஸாத்யம், இதற்கு பாஸிபிலிடி இருக்கிறது” என்று அறிவு மட்டத்தில் இம்மாதிரி சாஸ்திரங்களைப் போதித்து, ஈச்வரனின் பெரிய வரப்ரஸாதமான மநுஷ்ய அறிவின் ஆற்றல்களைத் தெரிந்துகொள்ளப் பண்ணுவதோடு நிறுத்த வேண்டுமே தவிர, இந்த வித்யாசாலைகளில் ப்ராக்டிகல் க்ளாஸ் என்று வைக்கக்கூடாது. சாஸ்திரம் நிஜம்தான் என்று காட்டுவதற்காகக் கொஞ்சம் டெமான்ஸ்ட்ரேஷன் வேண்டுமானால் குரு செய்து காட்டலாம். ஆகக்கூடி ஜாக்ரதையுடன் கையாளவேண்டிய விஷயம். அதற்காக, ‘அழிந்துபோகட்டும்’ என்று விடக்கூடாத வித்யை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வைத்ய சாஸ்த்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வேதாந்த விஷயத்திலும் இப்படியே
Next