ஸொத்துப் பரிபாலன அநுபவம் அவசியம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இப்படி ஊர் நிர்வாஹ ஸபைக்காரர்களுக்கு ஸொத்தினால் தகுதி ஏற்படுத்தியிருப்பதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது. இவர்கள் பொதுச்சொத்துக்களைப் பராமரிக்கவும், வகையறிந்து செலவழிக்கவும், முறைப்படி கணக்கு வைத்துக்கொள்ளவும் அறிந்திருக்க வேண்டுமல்லவா? எனவேதான் ஸொந்தச் சொத்தின் பரிபாலனத்தில் இவர்களுக்கு அநுபவம் இருந்தால் நல்லது என்று இப்படி ஷரத்து செய்திருக்கிறார்கள். திடீரென்று ஸொந்தமாக ஒரு ஸொத்தைப் பெற்றவன் அதை ‘தாம் தூம்’ என்று செலவு செய்யும் வாய்ப்பு எப்படி அதிகமோ, அப்படியே ஸொத்தில்லாதவனிடம் ஊர்ப் பொதுச் சொத்தின் நிர்வாஹத்தைத் தந்தாலும் ‘தாம் தூம்’ தர்பார் நடத்தக்கூடும். அல்லது இன்னொரு ‘எக்ஸ்ட்ரீ’மாக ரொம்பவும் யோசனை பண்ணிப் பண்ணி ரொம்பவும் சுஷ்கமாகவே பட்டுவாடா பண்ணி, ‘பப்ளிக் வெல்ஃபேர்’ (பொது நலப்பணி) அதற்குரிய ஜரூருடன் நடக்கவிடாமல் செய்து விடுவான். இதனாலெல்லாந்தான் ஸொத்துடமை ஒரு க்வாலிஃபிகேஷனாக வைக்கப்பட்டது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கையூட்டு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'தன் மனை' என்றதன் காரணம்
Next