புது ரத்தம் பிடிக்க : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு வருஷ ‘டெர்ம்’ ஆனவன் மூன்று வருஷத்துக்கு அங்கம் வஹிப்பதற்கில்லை என்று முன்னோர் செய்த வரையறையில் தொக்கி நிற்கும் இன்னொரு நல்ல அம்சம்: அவ்வப்போது ப்ரதிநிதிகளை மாற்றி மாற்றி, நிர்வாஹத்தில் புது ரத்தம் பிடிக்கும்படிச் செய்யவேண்டும் என்ற அபிப்ராயத்துக்கு இங்கே மதிப்புத் தரப்படுகிறது. வருஷத்துக்கு ஒரு தரம் தேர்தல் என்றும், ஒரு மெம்பரின் இரண்டு டெர்ம்களுக்கிடையிலே மூன்று வருஷ gap இருக்கவேண்டும் என்று வைத்தால், இப்படி வருஷா வருஷம் முப்பதுபேர் தேர்ந்தெடுக்கப்படும் முறையின் கீழே ஒரு க்ராமத்தில் நல்ல நடத்தையும், படிப்பும், கார்ய ஸாமர்த்யமும் உள்ள அத்தனை பேருக்குமே ஸபை மெம்பராகிப் பொதுப் பணியில் நேராக ஈடுபட வாய்ப்புக் கிடைத்திருக்கும். இதனால் ‘இது நம்முடைய ஸொந்தா ஸபை’ என்று ஊராருக்கு நல்ல பிடிமானம் ஏற்பட்டிருக்கும். ‘யாரோ என்னவோ நடத்தி விட்டுப் போகிறார்கள். நாம் தலையிட்டு என்ன நடக்கப்போகிறது?’ என்று பொதுஜனங்கள் ஊராட்சியில் அக்கறையில்லாமல் விலகி நின்றிருக்கமாட்டார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிற்பாடும் அசுத்தி ஏற்படாதிருக்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தார்மிக நிர்வாஹத்தின் முதுகெலும்பு
Next