மனமே பந்த காரணம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஏக ஸத்யமாக ஆகாமல் த்வைதமாக இருக்கிறவரையில் இன்னொன்றால் பயம் ஏற்படுகிறது என்று பார்த்தோம்.

ஏக ஸத்யமாக ஆவதுதான் மோக்ஷம் – பரிபூர்ணமாக விடுபட்ட நிலை. வீடு, விடுதலை என்பது.

“எதிலிருந்து விடுதலை, ஸ்வாமிகளே?”

ஸம்ஸாரத்திலிருந்து.

“இந்த ஸம்ஸாரத்தில் எதனால் கட்டுப்பட்டோம்?”

கர்மாவினால்! இது தெரியவில்லையா அப்பா?

“எதனால் கர்மா பண்ணினோம்?”

ஆசைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்வதற்காகத்தான்.

“ஆசை எதனால் உண்டாயிற்று?”

மனஸ் என்று ஒன்று இருப்பதால். மனஸ்தான் இந்த்ரியங்களின் வழியாகத் தன் ஆசைப் பூர்த்திக்கான அநுபவங்களை அநேக கார்யங்களின் மூலம் பெறுகிறது. ஸினிமா பார்ப்பது, வம்பு பேசுவது, கண்ட வஸ்துக்களைத் தின்னுவது என்று அநேக கார்யங்கள்.

“அப்படியானால் ஸம்ஸாரத்திலிருந்து விடுதலை என்றால் மனஸிலிருந்தே விடுபட வேண்டும் என்றுதானே ஆகும்?”

ஆமாம், அப்படித்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நரக பயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனமாற்ற ஆத்மாவின் ஆனந்தம்
Next