ஸம்ஸாரம் நீக்கி ஸதாநந்தம் அருளும் அடி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பரிமள பரிபோக ஸச்சிதாநந்தே என்று ஆசார்யாள் சொல்கிறார். பரிமளம் என்றால் ஸுகந்தம். பரிமளரங்கநாதர் என்றே சொல்வதுண்டு.

‘பரிபோகம்’ – ஸுகித்து ஸுகித்து அநுபவிக்கக்கூடியது. எத்தனை ருசித்தாலும் திகட்டாத ஆனந்தம் தருவது. எப்படிப்பட்ட ஆனந்தம்? ஸாதாரண விருந்து, நிலாச் சாப்பாடு சாப்பிடுகிற ஆனந்தமா? இல்லை. (தைத்திரீய) உபநிஷத்தில் ஆனந்தத்துக்கு மேல் ஆனந்தம் என்று ஒவ்வொரு தினுஸான ஆனந்தத்தையும் அடுக்கிக்கொண்டே போய் அதன் உச்சியாகச் சொல்லியிருக்கிற ப்ரம்மானந்தத்தையே தருவது பகவானின் பாதம்.

ப்ரம்மத்தை ஸத்-சித்-ஆனந்தம் என்பார்கள். அது தான் அழியாத உண்மைப் பொருளான ஸத். அதுவே அறியப்படுவதாகவும் அறிகிறவனாகவும்கூட இருக்கிற அறிவு: சித். அந்த நிலையில் தனக்கு வேறாக எதுவுமே இல்லாமலிருப்பதுதான் சாச்வத ஆனந்தம்: ஸச்சிதானந்தம். இந்த ஸச்சிதானந்தத்தையே தேனாகப் பொழிந்து கொண்டும், ஸுகந்தமாக மணம் வீசிக்கொண்டும் இருப்பது ஸ்ரீபதியின் பாதாரவிந்தம்:

திவ்யதுநீ மகரந்தே

பரிமள பரிபோக ஸச்சிதானந்தே

ஸ்ரீபதி பதாரவிந்தே

அது ஸச்சிதானந்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு முன்னால் இந்த ஸம்ஸார பயத்தைக் கெடுக்க வேண்டும்.

பவ பய கேத – ச்சிதே வந்தே

முதல் ச்லோகத்தில் தாரய ஸம்ஸார ஸாகரத: என்று வேண்டிக்கொண்டார் அல்லவா? அதில் வந்த ஸம்ஸாரமே இதில் ‘ய’ என்பதில் வரும் வம்.

‘ஸம்ஸாரம்’ என்பதை ‘வம்’, ‘வம்’ என்றும் சொல்வார்கள் வவினை’ ‘வஸாகரம்’ என்றெல்லாம் பாட்டுக்களில் வரும். வம் என்றால் உண்டாவது. சரவணத்தில் உண்டானவன் சரவணபவன். உத்வம் என்கிறோமே, அது ‘வ’த்தின் அடியாகப் பிறந்த வார்த்தைதான். ஸம்ஸாரம் என்றால் நிலையில்லாமல் ஓடிக் கொண்டேயிருப்பது. அது ‘வ’மானது. அதாவது அது “உண்டான வஸ்து”. உண்டானது என்பதாலேயே இது அநாதியாக, ஸ்வயம்புவாக இருப்பதல்ல என்றும், இன்னொன்றிலிருந்து பிறந்ததே என்றும் தெரிந்துவிடுகிறது. இதற்கு ஆதியும், பிறப்பும் இருப்பதாலேயே அந்தமும், அழிவும் இருந்துதான் ஆக வேண்டும். இது எதனிடமிருந்து உண்டாயிற்றோ அந்த பரமாத்ம தத்வமே ஆதியந்தமற்ற நித்யவஸ்து.

வன் என்று பரமேச்வரனுக்கும் பெயருண்டு. வன், சர்வன், ருத்ரன், பசுபதி, உக்ரன், மஹாதேவன், பீமன், ஈசானன் என்ற எட்டுப் பெயர்களும் பரமசிவனுக்கு ரொம்பவும் விசேஷமானவை. வனின் பத்னிதான் ‘வானி’; சர்வனின் பத்னி ‘சர்வாணி’; ருத்ர பத்னி ருத்ராணி; இப்படியே ஈசானன் – ஈசானி. எல்லாவற்றையும் உண்டாக்குவதால் அவன் ‘வன்’. அழிப்பதால் ‘சர்வன்’. ஆக்குகிறவனேதான் அழிப்பவனும்! “வ” என்ற வார்த்தையை வைத்து மூகர் (“பஞ்ச சதீ”யில்) வேடிக்கையாகச் சொல்வார்: “அம்மா! உன்னுடைய பாதம் வனுக்கு (சிவனுக்கு) ரொம்பவும் ஆனந்தத்தை உண்டாக்கிக் கொண்டே இன்னொரு பக்கத்தில் பவத்தை (ஸம்ஸாரத்தை) அழிக்கிறதே” என்று சொல்வார்*.

அம்பாள் பாதத்தை மூகர் சொன்னார். அவளுடைய புருஷ ஸ்வரூபமேயான மஹாவிஷ்ணுவின் பாதத்தைச் சொல்லும்போது ஆசார்யாள், “ஸம்ஸார பயம் என்ற துன்பத்தை வெட்டி எரிகிறது பகவானின் பாதம்” என்கிறார்.

பவபய கேத ச்சிதே

ஸம்ஸாரமானது பயத்தை மட்டுமில்லாமல் வேதனை, துக்கம், ஆயாஸம் எல்லாமும் தருகிறது. இவற்றைத்தான் ‘கேதம்’ என்று சொல்லியிருக்கிறது. ஸம்ஸார பயத்தையும், துக்கத்தையும் சிதைத்து அழிக்கும் திருவடிகளை நமஸ்காரம் பண்ணுகிறேன் என்கிறார்.

பவபய கேத – ச்சிதே வந்தே.


* பாதாரவிந்த சதகம், 98-ஆவது ச்லோகம்

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கங்கை சுரக்கும் திருவடி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அதிசய அந்தாதி
Next