விகாரமும் ஏற்றம் பெறுகிறது! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

புஷ்ப தந்தர் “சிவ மஹிம்ந ஸ்தோத்ர”த்திலே ஒரு இடத்தில்*, “விகாரோ அபி ச்லாக்ய:” – “விகாரமானதுங்கூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்று சொல்கிறார். விஷத்தைப் பரமேச்வரன் பானம் பண்ணி, அது அவருடைய வெள்ளைவெளேரென்ற சங்குக் கழுத்தில் நீலமணி மாதிரி ப்ரகாசிப்பதைப் பார்த்து, “விகாரமானதுகூட ச்லாகிக்கக் கூடியதாகிறது” என்கிறார். அப்படித்தான் இந்தப் பெரியவர்களுக்கு உண்டான அஹங்காரங்கூட முடிவில் அவர்களுடைய உட்சிறப்பை வெளிப்படுத்தி, மெச்சுதலுக்கு உரியதாகிறது. “விகாரோபி ச்லாக்ய:”


* ச்லோகம் 14

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நீலகண்டரும் மஹாதேவரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மாருதி மஹிமை
Next