மொழி, ஒலி ஒழுங்கு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கற்றுக் கொடுப்பதில் பாஷைதானே முக்யமாக உபகரணம்? உலகத்தின் ஆதி நூலாகிய ரிக்வேதத்திலேயே பாஷா ரூபத்தை நிர்ணயிப்பதான வ்யாகரணம் (இலக்கணம்) எவ்வளவு நன்றாக வரையறை செய்யப்பட்டிருந்திருக்கிறது என்பதைப் பார்த்து மேல்நாட்டுக்காரர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். வ்யாகரண விதிகள் என்று மற்ற எல்லா பாஷைகளுக்கும் இருப்பவற்றோடு மட்டுமில்லாமல், ஸ்வரங்கள் என்பதாக மந்த்ரங்களின் ஒவ்வொரு அக்ஷரத்தையும் எப்படி ஏற்றியோ, இறக்கியோ, ஸமமாகவோ உச்சரிக்க வேண்டுமென்பதையும் கற்றுக் கொடுத்தார்கள். ஆதியில் அந்த மந்த்ர சப்தங்கள் ரிஷிகளுக்கு எப்படி அநுக்ரஹமாயிற்றோ அதே ரூபத்தில் சொல்லிக் கொடுத்தார்கள். கால வரையறை செய்யமுடியாத அந்த ஆதி ஸ்கூலிலிருந்து ஆரம்பித்து எத்தனையோ யுகங்களுக்கு அப்புறம் இன்றைக்கு ஒரு கனபாடிகள் ஒரு சிஷ்யனுக்குச் சொல்லிக் கொடுப்பது வரையில், இந்த தேசம் பூராவும் கொஞ்சங்கூட வித்யாஸமில்லாமல் அதே ஸ்வரங்களில்தான் வேதங்களின் அப்யாஸம் இருந்து வந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பூர்வகால போதனையமைப்பின் வளர்ச்சி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  எழுத்தில்லாத போதனை
Next