கட்டாய கல்வி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த வித்யாஸங்கள் இருக்கட்டும். நான் சொல்ல வந்த முக்யமான விஷயம் என்னவென்றால், வித்யாப்யாஸத்துக்கு அர்ஹதை உள்ள மூன்று வர்ணத்தாரில் ஸகலரும் கட்டாயமாக ப்ரஹ்மோபதேசம் பெற்று, குருவிடம் கல்வி கற்றே ஆகவேண்டுமென்று சாஸ்த்ரங்களில் விதித்திருக்கிறது. இஷ்டமிருந்தால் படிக்கலாம், இல்லாவிட்டால் போகட்டும் என்று விடாமல் கம்பல்ஸரி எஜுகேஷனாக நடத்தியிருக்கிறார்கள். இப்படிச் செய்யாவிட்டால் கடுமையான தண்டனை விதித்திருக்கிறது. அக்காலத்தில் யாரும் ரொம்பப் பெரிய தண்டனையாக நினைத்து அவமானப்பட்டது ஜாதிப்ரஷ்டம்தான். வித்யாப்யாஸத்துக்கு வராத ப்ரஹ்ம, க்ஷத்ர, வைச்யர்களை இப்படி ஜாதி ப்ரஷ்டம் செய்யும்படியாகவே சாஸ்த்ரம் சொல்கிறது. இவர்களுடைய ஸந்ததியையும் ‘வ்ராத்யர்கள்’ என்பதாக ஸமூஹத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறது. வேத ஞானமும் கல்வியறிவும் அவற்றுக்குத் தகுதிபெற்ற எல்லாரிடமும் பரவுவதை இவ்வளவு முக்யமானதாக நம்முடைய பூர்விகர்கள் கருதி வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எல்லா ஜாதியாரும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாத்திரமறிந்து
Next