வித்யாதானத்தின் உயர்வு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

லோகோபகாரமாகச் செய்யக்கூடிய அநேகப் பணிகளில் ஸத்பாத்ரத்துக்கு வித்யையை போதிப்பதற்கு ஸமமாக எதையும் சொல்ல முடியாது என்று நம் முன்னோர் அபிப்ராயப்பட்டனர். ‘வித்யாதானம்’, ‘வித்யாதானம்’ என்று இதை மிகவும் விசேஷித்துச் சொல்லியிருக்கிறது. ‘தானம்’ என்ற பதத்தைப் போட்டதாலேயே, கற்றுக் கொடுக்கிற ஆசார்யர் வித்யார்த்தியிடமிருந்து எந்த த்ரவ்ய லாபமும் எதிர்பார்க்கக்கூடாது என்று ஏற்படுகிறது.

மநு ஸ்ம்ருதியில் இதைப் பற்றிச் சொல்லும்போது, “தானங்களிலேயே சிறப்பு வாய்ந்தவற்றுக்கு அதிதானம் என்று பேர். கோதானம், பூதானம், வித்யாதானம் ஆகிய மூன்றும் அதிதானங்கள். அன்னதானமும் உயர்வானது. வயிற்றுக்கு அன்னம் போடுவதைவிட அறிவுக்கு அன்னமாக வித்யாதானம் செய்வது சிறப்புடையது. வித்யைகளில் பல இருக்கின்றன. இவற்றில் எதை தானம் செய்வதுமே விசேஷந்தானென்றாலும், வித்யைகளுக்குள்ளேயே தலை சிறந்ததாக உள்ள ஆத்ம வித்யையான ப்ரஹ்ம வித்யையை தானம் செய்வதன் சிறப்பைச் சொல்லிமுடியாது. ப்ரஹ்ம வித்யாதானம் செய்பவனுக்கு தேவலோகமான ஸ்வர்க்கம் மட்டுமின்றி, ஸம்ஸார பந்தமே தீர்ந்து பரமாத்மாவோடு ஐக்யப்பட்டிருப்பதான மோக்ஷமும் கிட்டிவிடுகிறது” என்றெல்லாம் புகழ்ந்து சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இன்னொர் உண்மை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கல்வித் திட்டத்தில் கால அளவைகள்
Next