ஆரோக்ய வளர்ச்சிக்கும் உதவி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே அறிவு வளர்ச்சி, குண வளர்ச்சி மாத்திரமில்லாமல் தேஹாரோக்ய அபிவ்ருத்தியும் கலந்திருப்பதை கவனிக்கவேண்டும். காலங்கார்த்தாலே எழுந்து குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்து, ப்ராணாயாமம், ஸூர்ய நமஸ்காரம் பண்ணுவதில் புத்தி சுத்தியும் ஹ்ருதய சுத்தியும் வ்ருத்தியாவதோடு தேஹ ஆரோக்யமும் நல்ல வளர்ச்சி பெறும். குருவுக்காக விறகு வெட்டிக்கொண்டு வருவது போன்ற வேலைகளில் இதேபோல, ஒரு பக்கம் மனஸில் எளிமை உண்டாவதோடு மறுபக்கம் சரீரத்திலும் வலிவு ஏற்படும்.

ஒரு மனுஷ்ய ஜீவனென்றால் அவனுக்கு தேஹம், புத்தி, ஆத்மா என்று மூன்று இருக்கிறது. மூன்றையும் நல்ல முறையில் வளர்ப்பதாகப் பழங்காலக் கல்வி முறை இருந்திருக்கிறது.

மிகவும் பூர்வகாலத்தில் நம்மிடம் இருந்த ‘எஜுகேஷன் ஸிஸ்டம்’ பற்றி இவ்வளவும் சொன்னேன். இன்னம் அநேக விஷயங்களும் இருக்கின்றன. எனக்கே தெரியாமல் எவ்வளவோ இருக்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மாணவன் லட்சணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தனிப்பட்ட ஆசான் பெருமை
Next