திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவாய்மூர்
1) நாகப்பட்டினம் - திருத்துறைப்பூண்டி பேருந்துச் சாலையில் சென்று, எட்டிக்குடிக்குப் பிரியும் சாலையில் திரும்பிச் சென்றால் தலத்தையடையலாம். லீலாஹாஸ்யபுரம் என்னும் பெயருடையது. சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று. விடங்கர் - நீலவிடங்கர். நடனம் - கமலநடனம். இருக்கை - இரத்தினசிம்மாசனம். சூரியன் வழிபட்ட தலம். "வாய்மூரில் இருப்போம் தொடர்ந்து வா" என்று அப்பர் பெருமானை இறைவன் உணர்த்தி அழைத்துச் சென்ற அரிய செய்தி.
இறைவன் - வாய்மூர்நாதர்.
இறைவி - க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்.
தலமரம் - பலா.
தீர்த்தம் - சூரியதீர்த்தம்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
கோயிலுக்கெதிரில் குளம் உள்ளது. கரையில் விநாயகர் உள்ளார். மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றது. வெளிச்சுவற்றில் நால்வர், பைவரர் சந்நிதிகளும் உள் சுற்றில் விநாயகரும், வள்ளி தெயவ்யானை சமேச சுப்பிரமணியரும், மகாலட்சுமியும் உள்ளனர். நடராஜசபை உள்ளது. நடராஜர் அழகான மூர்த்தி. இத்தலத்தில் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் உள்ளன. மூலவருக்குத் தென்பால் தியாகராஜ - நீலவிடங்கர் சந்நிதியுள்ளது. வடாபல் வேதாரண்யேஸ்வரர் தரிசனம் தருகிறார். மூலவர் அழகான தோற்றம்.
கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார். ஐப்பசி மாதப்பிறப்பன்ற தியாகராஜரக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றது. இத்தலத்திற்குப் பக்கத்தில் எட்டுக்குடி, திருக்கோளிலி முதலிய தலங்கள் உள்ளன.
"வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண உடை மேலோர்
பந்தஞ் செய்து அரவசைத்து ஒலிபாடி
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந் தெனக்கு அருள் நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே". (சம்பந்தர்)
"பாடி அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழுவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவறே". (அப்பர்)
-நீளுலகம்
"கர்ய்மூர்க்கரேனுங் கருதில் கதி கொடுக்கும்
வாய்மூர்க்கமைந்த மறைக்கொழுந்தே". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. வாய்மூர்நாதர் திருக்கோயில்
திருவாய்மூர் - அஞ்சல்
(வழி) திருக்குவளை s.o. 610 204
திருவாரூர் வட்டம் - மாவட்டம்.