புறவார்பனங் காட்டூர் (பனையபுரம்)

திருமுறைத்தலங்கள்
நடுநாட்டுத் தலம்

புறவார்பனங் காட்டூர் ( பனையபுரம்)

மக்கள் வழக்கில் 'பனையபுரம்' என்று வழங்குகிறது.

(1) திண்டிவனம் - விழுப்புரம் மெயின் ரோடில் விக்கிர வாண்டியைத்தாண்டி, பண்ருட்டி, நெய்வேலி, தஞ்சாவூர் முதலிய ஊர்களுக்குச் செல்லும் (தஞ்சாவூர்) சாலையில் திரும்பி 2 A.e. சென்றால் சாலையோரத்திலுள்ள பனையபுரத்தை அடையலாம், ஊரின் தொடக்கத்திலேயே கோயிலும் சாலையோரத்தில் உள்ளது.

(2) விழுப்புரம் - பாண்டி (திருக்கனூர்வழி) செல்லும் பேருந்தில் சென்று கோயிலருகில் இறங்கலாம். முண்டியம்பாக்கத்திற்குப் பக்கத்திலுள்ளதலம். பனையைத் தலமரமாகக் கொண்டுள்ள தலங்கள் - காடுகளால் சூழ்ந்த பகுதியாக

இத்தலம் விளங்கியமையின் (புறவு - சோலை, £கடு) 'புறவார் பனங்காட்டூர்' என்றழைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய கோயில்.

இறைவன் - பனங்காட்டீஸ்வரர்.

இறைவி - சத்யாம்பிகை, புறவம்மை.

தலமரம் - பனை.

தீர்த்தம் - பத்ம தீர்த்தம்.

சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சூரியன் வழிபட்ட தலம். சிறிய ராஜகோபுரம் - உள்நுழைந்ததும் கவசமிட்ட கொடிமரம்.. வெளிப் பிராகாரத்தில் விநாயகர், ஆறுமுகர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் தலமரமாகிய பனைமரங்கள் மூன்று உள்ளன. அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. நின்ற திருக்கோலம். துவாரபாலகியர் சுதையில் உள்ளனர். துவாரகணபதியையும், தண்டபாணியையும் தொழுது உட்சென்று சத்யாம்பிகையைத் தரிசிக்கலாம் நவக்கிரகம் தொழுது, வலம் முடித்து, கொடிக் கம்பம் வணங்கி, வாயில் நுழைந்தால் சுவாமி சந்நிதியை அடையலாம்.

துவாரபாலகர்கள் உளர். ஒருபுறம் விநாயகரும், மறுபுறம் ஆறுமுகப் பெருமானும் காட்சியளிக்கின்றனர். வாயில்கடந்து உட்சென்றால் உட்பிராகாரத்தில் விநாயகர், அறுபத்துமூவர் சிலாரூபங்கள், வரிசையாகவுள்ளன, இவற்றுள் திருநீலகண்டர் தம் மனைவியுடன் கூடி, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் அமைப்பு மிகவும் அரிதான காட்சியாகும் - அற்புதமானதுங் கூட. தொடர்ந்து சப்தமாதர்களும், பைரவரும், தேவியருடன் கூடி மகாவிஷ்ணுவும், நால்வரும் காட்சியளிக்கின்றனர். சந்நிதிவாயிலைக் கடந்தால் வலப்பால் நடராசசபை. உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

நேரே மூலவர். அழகான அமைப்பான சிவலிங்கத் திருமேனி. கோயில் நல்ல சுற்றுமதிலுடன் நன்கு விளங்குகின்றது. முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டில் இறைவன் 'திருப்பனங்காடுடைய மகாதேவர்' என்று குறிக்கப்படுகின்றார்.


"விண்ணமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்விரி

பண்ணமர்ந் தொலிசேர் புறவார் பனங்காட்டூர்ப்

பெண்ணமர்ந்தொரு பாகமாகிய பிஞ்ஞகா பிறைசேர் நுதலிடைக்

கண்ணமர்ந்தவனே கலந்தார்க் கருளாயே."

(சம்பந்தர்)

-"பென்தகையார்

ஏர்ப் பனங்காட்டூர் என்று இருநிலத்தோர் வாழ்த்துகின்ற

சீர்ப் பனங்காட்டூர் மகிழ்நிஷேபமே"

(அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில்

பனையபுரம் - அஞ்சல் - 605 603

(வழி) முண்டியம்பாக்கம், விழுப்புரம் வட்டம்,

விழுப்புரம் மாவட்டம்.




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமுண்டீச்சரம்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  திருஆமாத்தூர்
Next