திருவீழிமிழலை

திருவிசைப்பா

திருவீழிமிழலை

(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.)

பாடல்

ஏக நாயகனை இமையவர்க்கு அரசை

என்னுயிர்க்கு அமுதினை எதிரில்

போக நாயகனைப் புயல்வனற்கு அருளிப்

பொன்னெடுஞ்சிவிகை யாவூர்ந்த

மேக நாயகனை மிகு திரு iN

மிழலை விண்ணிழி செழுங்கோயில்

யோக நாயகனையன்றி மற்றொன்றும்

உண்டெனன உணர்கிலேன் யானே.


பாடு அலங்காரப் பரிசில் காசு அருளிப்

பழுத்த செந்தமிழ் மலர்குடி

நீடு அலங்காரத்து எம்பெரு மக்கள்

நெஞ்சினுள் நிறைந்து நின்றானை

வேடலங்காரக் கோலத்தின் அமுதைத்

திருவீழிமிழலை யூராளும்

கேடிலங் கீர்த்திக் கனக கற்பகத்தைக்

கெழுமுதற்கு எவ்விடத்தேனே." (சேந்தனார்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திருவாரூர்
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருவாவடுதுறை
Next