திருவிசைப்பா
திருவாவடுதுறை
(தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது)
பாடல்
"பொய்யாத வேதியர் சாந்தை மெய்ப்
புகழாளர் ஆயிரம் பூசுரர்
மெய்யே திருப்பணி செய்சீர்
மிகு காவிரிக்கரை மேய
ஐயா ! திருவாடுதுறை
அமுதே ! என்றுன்னை அழைத்தக்கால்
மையார்தடங்கண் மடந்தைக்கு ஒன்று
அருளாது ஒழிவது மாதிமையே." (சேந்தனார்)