திருவண்ணாமலை

திருவாசகத்தலங்கள்

திருவண்ணாமலை

தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில் உள்ளது.

பாடல்கள்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்


வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டுஇங்ஙன்

எதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே

ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய்.


போற்றி அருளுக நின்ஆதியாம் பாதமலர்

போற்றி அருளுகதின் அந்தமாம் செந்தளிர்கள்

போற்றி எல்லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்

போற்றி எல்லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

போற்றி மால்நான்முகனும் காணாத புண்டரிகம்

போற்றி யாம்உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்

போற்றி யாம்மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.


விண்ணாளும் தேவர்க்கு வேதியனை

மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானைப்

பெண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையில்

கண்ணார் கழல்காட்டி நாயேனை ஆட்கொண்ட

அண்ணா மலையானைப் பாடுதுங்காண் அம்மானாய் (திருவாசகம்)

Previous page in  கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is திரு உத்தரகோசமங்கை
Previous
Next page in கட்டுரைகள் - திருவாசகத்தலங்கள்  is  திருக்கழுக்குன்றம்
Next