ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருப்புள்ளம்பூதங்குடி
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் பாதையில் சுவாமி மலைக்கப்பால் 3 மைல் தூரத்தில் உள்ளது. ஸ்ரீ அஹொபில மடத்தின் நிர்வாகத்தில் இருக்கின்றது. மடத்தில் வசதிகள் உண்டு.
மூலவர் - வல்வில் ராமன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி) .
தீர்த்தம் - ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம்.
விமானம் - சோபன விமானம்.
ப்ரத்யக்ஷம் - சக்ரவர்த்தித் திருமகன், க்ருத்ரராஜன்.
விசேஷங்கள் - ஸ்ரீராமன், ஜடாயுவுக்கு மோக்ஷமளித்தபின் ச்ரமபரிஹாரம் செய்துகொள்ளும் நிலையில் கோவில் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஸீதையைப் பிரிந்த நிலையாகையால் பக்கத்தில் ஸீதை இல்லை. பூமிப்பிராட்டி மட்டுமே அமர்ந்திருக்கிறார். தனிக்கோவில் நாச்சியாருக்கே பொற்றாமரையாள் என்ற பெயர். உத்ஸவ மூர்த்தியான ராமனுக்கு சதுர்புஜங்கள் உள்ளன. ஸ்ரீஅஹோபில மடம் 19வது பட்டம் ஜீயர் ஸ்ரீ ஸ்ரீ நிவாஸயதீந்த்ர மஹாதேசிகனுக்கு ஒரு பிருந்தாவனம் உள்ளது.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1348 - 57 -10 பாசுரங்கள்