திரு ஆதனூர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

சோழநாட்டு திருப்பதிகள்

திரு ஆதனூர்

சுவாமிமலை ஸ்டேஷனிலிருந்து சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இங்கு வசதிகள் எதுவும் இல்லை. இந்தக் கோவில் ஸ்ரீ அஹோபில மடத்து நிர்வாஹத்தில் உள்ளது.

மூலவர் - ஆண்டாளக்குமையன், புஜங்கசயனம், தலையின் கீழ் மரக்காலும் இடது கையில் ஓலை எழுத்தாணியும் காண்கின்றன, கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - ரங்கநாயகி.

தீர்த்தம் - ஸ¨ர்யபுஷ்கரிணி.

விமானம் - ப்ரணவ விமானம்.

ப்ரத்யக்ஷம் - திருமங்கையாழ்வார், காமதேநு.

விசேஷம் - பெருமாளுடைய பாதாரவிந்தங்களில் திருமங்கையாழ்வாரும், காமதேநுவும் உள்ளனர்.

இப்பெருமாளை 'ஆதனூர் ஆண்டளுக்கும் ஐயன்' என்பர்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் - 2674 (130) - 1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருப்புள்ளம்பூதங்குடி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்குடந்தை (பாஸ்கர க்ஷேத்ரம்)
Next