ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கண்ணபுரம்
(கிருஷ்ணாரண்ய க்ஷேத்ரம், பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரம், ஸப்த புண்ணிய க்ஷேத்ரம்)
நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் போகும் பஸ்ஸில் திருப்புகலூர் (திருப்புகூர்) என்ற இடத்தில் இறங்கி 1 மைல் போக வேண்டும். நன்னிலம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 4 மைல் தூரம். மாயவரத்திலிருந்து சென்னா நல்லூர்
வழியாகத் திருப்புகலூர் வரலாம். இங்கு வசதிகள் ஒன்றும் இல்லை. நன்னிலத்தில் தங்கி ஸேவிக்கலாம். குடவாசலிலிருந்தும் பஸ் வசதி உண்டு.
மூலவர் - நீலமேகப் பெருமாள், செனரிராஜன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - செனரிராஜப் பெருமாள்.
தாயார் - கண்ணபுரநாயகி (ஸ்ரீ தேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி) தனிக்கோயில் நாச்சியார்.
தீர்த்தம் - நித்யபுஷ்கரிணி.
விமானம் - உத்பலாவதக விமானம்.
பரத்யக்ஷம் - கண்வமுனிவர், கருடன், தண்டக மஹரிஷி.
விசேஷங்கள் - அபயஹஸ்தத்துக்குப் பதிலாக வரதஹஸ்தம் விளங்குகின்றது. ப்ரயோக சக்ரம். உபயநாச்சிமாருக்கு அப்பால், இடதுபுறம் கிரீடத்துடன் ஆண்டாளும், வலதுபுறம் பெருமாள் மணந்துகொண்ட பத்மாவதித் தாயார் என்ற (செம்படவ அரசகுமாரியும்) உள்ளனர். உத்ஸவப்பெருமாள் கன்யகாதானம் வாங்க கையேந்திய நிலையில் ஸேவையளிக்கிறார். ஸ்ரீ மந்நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்த க்ஷேத்திரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால் இது 'ஸ்ரீ மத்ஷடாக்ஷர மஹா மந்த்ரஸித்தி க்ஷேத்திரம்' என்று பெயர் பெற்றது. திருமங்கையாழ்வாருக்கு திருமந்திர உபதேசம் செய்யப்பட்ட ஸ்தலம். ரங்கபட்டர் என்கிற அர்ச்சகர் சோழ அரசனுக்கு, பெருமாளுக்குகேசம் வளர்ந்ததை காட்டுவதாக வாக்களித்ததை காப்பாற்ற, பெருமாள் திருவடியில் திருக்குழற்கற்றையை வளர்த்து கேசத்தைக் காட்டியருளியதால் செனரிராஜன் என்ற பெயர் உண்டாயிற்று. விபீஷண ஆழ்வாருக்கு பகவான் நடை அழகை ஸேவை ஸாதித்த ஸ்தலம். பெருமாள் தன் சக்ராயுதத்தால் வீகடாக்ஷன் என்ற துஷ்ட அசுரனை நிக்ரஹம் செய்து மஹரிஷிகள் பிரார்த்தனைபடி சக்ர பிரயோக அவஸரமாக ஸேவை ஸாதிக்கும் ஸ்தலம். முனையதரையர் என்ற மஹா பக்திமான் அவருடைய பத்தினி சமைத்த பொங்கலை அர்த்தஜாமத்திற்குப் பிறகு கோவிலுக்குள் போக முடியாமல் மானஸீகமாக பக்தியுடன் ஸமர்ப்பித்ததை பகவான் திருவருள்ளம் பற்றியதால், மூடிய கோவிலில் மணி ஓசை கேட்டு வெண்பொங்கல் வாஸனை நிவேதனத்திற்கு "முனியோதரம் பொங்கல்" என்ற பெயர் வரலாயிற்று. இவ்விடத்தில் இன்றைக்கும் தினந்தோறும் வெண்ணை உறுக்கி பொங்கல் செய்து பெருமாளுக்கு நிவேதனம் செய்து விசேஷம்.
மங்களா சாஸனம் -
பெரியாழ்வார் - 71.
ஆண்டாள் - 535.
குலசேகராழ்வார் - 719 - 729.
திருமங்கையாழ்வார் - 1648-1747, 2067, 2078, 2673 (72) , 2674 (90, 133)
நம்மாழ்வார் - 3656 - 3666
மொத்தம் 128 பாசுரங்கள்.