ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவண்புருடோத்தமம் (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. பஸ் வசதி உண்டு. இதுவும் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.
மூலவர் - புருஷோத்தமன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - திருப்பாற்கடல் தீர்த்தம்.
விமானம் - ஸஞ்ஜீவிவிக்ரஹ விமானம்.
ப்ரத்யக்ஷம் - உபமன்யு.
விசேஷம் - உத்ஸவப் பெருமாளின் திருவுருவம் மிக அழகியது. தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருடஸேவை மிக விசேஷம். ஸ்ரீ மணவாள மாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாசாஸனம் செய்த இடம்.
குறிப்பு - திருமணிமாடக் கோவில், திருஅரிமேய விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருவெண்புருடோத்தமம் - இந் நான்கும் திருநாங்கூரின் ஒரே தெருவின் பக்கங்களில் உள்ளன. உத்ஸவத்தின் போது வரும் யாத்ரீகர்களுக்கு இங்கே பிரஸாதம் கொடுக்கிறார்கள்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1258-67 -10 பாசுரங்கள்.