ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருநைமிசாரண்யம்
கல்கத்தா - டேராடூன் ரயில் மார்க்கத்தில் பாலமவ் ஜங்ஷ்ன் வந்து அங்கிருந்து சீதாப்பூர் போகும் கிளை ரயிலில் ஏறி வழியிலுள்ள நைமி சாரண்யா ஸ்டேஷனில் இறங்கி 2 மைல் தூரம் மாட்டுவண்டியில் அல்லது நடந்து சென்று இவ்வூரை அடையலாம். இங்கு அஹோபில மடமும் ஒரு ராமானுஜ கூடமும் தங்க வசதியளிக்கின்றன. அஹோபில மடத்தில்தான் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அஹோபில மடத்தில் தேவனார்விளாக அழகிய
சிங்கர் ப்ருந்தாவனம் உள்ளது.
மூலவர் - தேவராஜன் (ஸ்ரீ ஹரி) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - ஸ்ரீ ஹரிலக்ஷ்மி (புண்டரீகவல்லி)
தீர்த்தம் - சக்ரதீர்த்தம், கோமுகி நதி, நேமி, திவ்யவிச்ராந்த தீர்த்தங்கள்.
ஸ்தல வ்ருக்ஷம் - தபோவனம்.
விமானம் - ஸ்ரீ ஹரி விமானம்.
ப்ரத்யக்ஷம் - இந்திரன், சுதர்மன், தேவரிஷி, சூதபுராணகிர், வேதவ்யாஸர்.
விசேஷங்கள் - ஆழ்வார் பாடிய ஆலயமும் மூர்த்திகளும் இப்போது இல்லை. இங்கு, பகவான் ஆரண்ய ஸ்வரூபியாக இருப்பதாக நம்பி, காட்டையே வணங்குகிறார்கள். கோமுகி நதியில் ஸ்நானம் செய்துவிட்டு சக்ரதீர்த்தத்தில் ஸ்நானம் செய்யலாம். இந்தத் தீர்த்தக்கரையில் சக்கரத்தாழ்வான் (சக்ரநாராயணன் என்கிறார்கள்) விநாயகர், ராம, லக்ஷ்மண, ஸீதை, முதலியவர்களின் ஆலயங்கள் ¢
உள்ளன.
கோமுகி நதிக்குப் போகும் வழியில் வியாஸகட்டீ என்ற இடத்தில் வேதவ்யாஸர் ஆலயம் உள்ளது. இதுதான் வ்யாஸபகவானும், சுகப்ரஹ்மமும் ப்ரவசனங்கள் செய்து, பாரதம் பாகவதம் முதலிய இதிஹாஸ புராணங்களியற்றிய
புண்யபூமி.
ஊரின் மற்றொரு புறத்தில், புராண மந்திர் என்ற சுக பகவான் ஆலயத்தில் அவருடைய வெண்கலச்சிலை (கிளிமூக்குடன்) பெரியதாக வைக்கப்பட்டுள்ளது. இதற்குச் சற்று அப்பால் ஒரு சிறிய குன்றின் மேல் ஹனுமான் கட்டீ என்ற ஆலயத்தில் மிகப் பிரம்மாண்டமான உருவுள்ள ஹனுமார், ஸ்ரீ ராமலக்ஷ்மணர்களை இரு தோள்களிலும் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 998-1007 - 10 பாசுரங்கள்