திருப்பிருதி (ஜோழிமட்-நந்தப்ரயாக்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

வடநாட்டுத் திருப்பதிகள்

திருப்பிருதி (ஜோழிமட்-நந்தப்ரயாக்)

ஹ்ருஷீ கேசத்திலிருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள ஜோஷிமட் என்ற இடந்தான் திருப்பிருதி என்பது பொதுவான அபிப்ராயம். ஹரித்வாரிலிருந்து 154 வது மைல்.

மூலவர் - பரமபுருஷன் புஜங்கசயனம் கிழக்கே திருமக மண்டலம்.

தாயார் - பரிமளவல்லி நாச்சியார்.

தீர்த்தம் - இந்த்ர தீர்த்தம். கோவர்த்தனதீர்த்தம். மானஸஸரஸ்.

ப்ரத்யக்ஷம் -பார்வதி.

விசேஷங்கள் - இப்போது ஆதிசங்கரரால் கட்டப்பட்ட நரஸிம்மர் ஆலயமும், வாஸுதேவர் ஆலயமுமே உள்ளன. வாஸுதேவர் நின்ற திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கின்றார். இப்பெருமாளைத்தான் ஆழ்வார் பாடியுள்ளதாகக் கூறுகின்றனர். இக்கோயிலுக்கு சுமார் முக்கால் மைல் தூரம் படியிறங்கிச் செல்லவேண்டும்.

இது தவிர. நந்தப்பிரயாகைதான் திருப்பிருதி என்றும், இவை இரண்டுமே திருப்பிருதியில்லை, அது கங்கைக்கரையில் இல்லை, ஹிமயமலையின் உட்புறப்பகுதிகளில் எங்கோ இருக்கிறது என்றும் பலவித அபிப்ராயங்கள் உள்ளன. ஆதிசங்கரரால் இவ்விடத்தில் ஜ்யேஹிஷ் பீடத்தை ஸ்தாபனம் செய்து

ஒரு முசுக்கட்டை மரத்தடியில் தவம் இருந்து திவ்ய ஞானம் பெற்று, சங்கர பாஷ்யத்தை இயற்றியதாக ஐதீஹம். சமுத்திர மட்டத்திலிருந்து 6150 அடி உயரம்.

மங்களாசாஸனம் -

திருமங்கையாழ்வார் -- 958-967 - 10 பாசுரங்கள்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருநைமிசாரண்யம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)
Next