ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
வடநாட்டுத் திருப்பதிகள்
திருக்கண்டமென்னும் கடிநகர் (தேவப்ரயாகை)
ரிஷிகேசத்திருந்து பத்ரிநாத் போகும் வழியில் 45 மைல் தூரத்தில், ஹரித்வாரத்திலிருந்து பத்ரிக்குச் செல்லும் மார்க்கத்தில் 59வது மைலிலும் உள்ளது. பத்ரியிலிருந்து திரும்பு கையில் இறங்கி ஸேவித்துவிட்டு அடுத்து பஸ்ஸில் வரலாம். சமுத்திர மட்டத்திலிருந்து 1700 அடி உயரம்.
மூலவர் - நீலமேகப்பெருமாள் (புருஷோத்தமன்) , நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - புண்டரீகவல்லி.
விமானம் - மங்கள விமானம்.
ப்ரத்யக்ஷம் - பரத்வாஜமுனி.
விசேஷங்கள் - கோயிலுக்குப் பின்னால் அழகான சிறிய ஹநுமார் இருக்கிறார். இங்கு அளகநந்தா. பாகீரதி - இவற்றின் சங்கமம் ஆதி கங்கையாக போற்றப்படும் புண்ணிய ஸ்தலம். மிக்கரமணீயமான க்ஷேத்ரம். மிகவும் ஜாக்ரதையாக ஸ்நாநம் செய்யவேண்டும். ஆழ்வார் பாடிய பெருமாளை ரகுநாத்ஜீ என்றழைக்கின்றனர். இங்கே ப்ருஹ்மதேவ். தசரத மஹாராஜன், ராமன், முதலியோர் தவம் செய்த ஸ்தலம். இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ரகுநாதனின் மூர்த்தியை ஆதிசங்கரர் ஸ்தாபித்தார். ரகுநாத்ஜீயின் கோயிலுக்கு அருகில் பத்ரிநாத், காலபைரவர். மஹாதேவர், ஹநுமார் முதலியோரின் அழகான மூர்த்திகளும் உள்ளன.
மங்களாசாஸனம் -
பெரியாழ்வார் - 391-401 - 11 பாசுரங்கள்.