ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
மலைநாட்டுத் திருப்பதிகள்
திருவித்துவக்கோடு (திருவிச்சிக்கோடு, திருவிஞ்சிக்கோடு)
ஷோரனூர் - கள்ளிக்கோட்டை மார்க்கத்தில் பட்டாம்பி ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் தூரம். ஷோரனூரிலிருந்து குருவாயூர் போகும் பஸ்ஸில் 10 மைல் சென்று இறங்கி, ஒரு குறுகிய சாலையில் 1 மைல் நடக்க வேண்டும்.
பட்டாம்பி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிப் பாரதப்புழை ஆற்றைக் கடந்து, 1 மைல் நடந்தும் கோயிலை அடையலாம். பஞ்ச பாண்டவர்கள் தவம் செய்த இடம்.
மூலவர் - உய்யவந்த பெருமாள், அபயப்ரதன், நின்ற திருக்கோலம, தெற்கே திருமுக மண்டலம்.
தாயார் - வித்துவக்கோட்டு வல்லி, பத்மபாணி நாச்சியார்.
தீர்த்தம் - சக்ர தீர்த்தம்.
விமானம் - தத்வகாஞ்சன விமானம்.
ப்ரத்யக்ஷம் - அம்பரீஷன்.
விசேஷங்கள் - கோவிலில் நுழைந்ததும் எதிரே சிவன் ஸந்நிதியும்
அதன்பின் பெருமாள் ஸந்நிதியும் இருக்கின்றன. அம்பரீஷன் "பரதேவதையை ஸேவிக்க வ்யூஹாவதாரத்தை அநுக்ரஹிக்க வேண்டும்" என்று பகவானைப் பிரார்த்தித்தபடியால் பகவான் இங்கு நான்கு வடிவம் கொண்டு எழுந்தருளி இருபப்தாக ஐதீஹம். நடுவில் இருக்கும் மூர்த்தியை தர்மபுத்திரரும், மேற்கில் இருக்கும் மூர்த்தியை அர்ஜுனனும், இடப்புறத்திலுள்ள மூர்த்தியை பீமஸேனனும், வலப்புறத்திலுள்ள மூர்த்தியை நகுலனும், நகுலன் பூஜை செய்ததையே ஸஹாதேவனும் பூஜித்ததாக வரலாறு. அம்பரீஷன் முக்தி அடைந்த ஸ்தலம் என்றும் வரலாறு. பஞ்சபாண்டவர்கள் ஐவரும் சேர்ந்து ஸேவித்த ஸ்தலம். ஆஹாராதிகளுக்கு வசதி இல்லை.
மங்களாசாஸனம் -
குலசேகராழ்வார் - 638-97 - 10 பாசுரங்கள்.