ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருப்புளிங்குடி (ஆழ்வார் நவதிருப்பதி)
வரகுணமங்கையிலிருந்து சுமார் முக்கால் மைல் தூரம் அதே சாலையில் சென்று அடையலாம். மார்க்கம் (மார்க்கம் 91, 92 காண்க) . ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வந்தால் 2 மைல் அதிகம்.
மூலவர் - காய்சினவேந்தன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - மலர்மகள் நாச்சியார், பூமகள் நாச்சியார், (பெரிய திருவுருவங்கள்) , புளிங்குடிவல்லி என்ற சிறிய உத்ஸவத்தாயாரும் உண்டு. தனிக்கோவில் நாச்சியார் கிடையாது.
தீர்த்தம் - வருண, நீர்ருதி தீர்த்தம்.
விமானம் - வேதஸார விமானம்.
ப்ரத்யக்ஷம் - வருணன், நிர்ருதி, தர்மராஜன், நரர்.
விசேஷங்கள் - பெருமாள் திருவயிற்றிலிருந்து தாமரைக் கொடி தனியாகக் கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள ப்ரஹ்மாவின் தாமரைமலருடன் சேர்ந்து கொள்கிறது. பாதங்களை வெளி ப்ராகாரத்திலிருந்து ஒரு ஜன்னல் வழியாகப் பார்க்க வேண்டும். உள்ளேயே ஊன்றிப் பார்த்தால் ஒரு பாதம் ஸேவையாகிறது. இந்திரனக்கு ப்ரஹ்மஹத்தி தோஷம் விடுபட்ட ஸ்தலம். வஸிஷ்டபுத்ரர்களால் ராக்ஷஸனாக சபிக்கப்பட்ட யக்ஞ்சர்மா என்ற ப்ராம்மணன், பகவான் அடிபட்டு சாப விமோசனம் ஆனதாக ஸ்தல வரலாறு.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3473, 3568-78 - 12 பாசுரங்கள்.