திருக்குளந்தை (பெருங்குளம், ஆழ்வார் நவதிருப்பதி)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

பாண்டியநாட்டுத் திருப்பதிகள்

திருக்குளந்தை (பெருங்குளம், ஆழ்வார் நவதிருப்பதி)

திருப்புளிங்குடியிலிருந்து (மார்க்கம் 93 காண்க) அதே சாலையில் இன்னும் 6 மைல் சென்று அடையவேண்டும். ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து வடகிழக்கில் 7 மைல் 'ஏரல்' பஸ்ஸில் வரலாம்.

மூலவர் - ஸ்ரீநிவாஸன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

உத்ஸவர் - மாயக்கூத்தன்,

தாயார் - அலமேலுமங்கைத் தாயார், குளந்தைவல்லி என்று இரண்டு உபயநாச்சியார்கள். (தனிக்கோயில் நாச்சியார் கிடையாது.)

தீர்த்தம் - பெருங்குளம்.

விமானம் - ஆநந்தநிலய விமானம்.

ப்ரத்யக்ஷம் - ப்ருஹஸ்பதி

விசேஷங்கள் - கருடனும் உத்ஸவராகப் பெருமாள் பக்கத்தில் எழுந்தருளியிருக்கிறார். வேதசாரன் என்ற அந்தணனுக்கு கமலாவதி என்று ஒரு கன்னிகை பிறந்து, அவள் கடவுளையே கணவனாக அடைய தவம் புரிந்து, மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி, தம் கெனஸ்துவ மணியுடன் அவளை சேர்த்து ஆலிங்கனம் செய்து, விவாஹம் செய்து கொண்டதாகவும், பாலிகை தவம் செய்த இடமாதலால், 'பாலிகைவனம்' என்ற பெயரடைந்ததாகவும் புராண வரலாறு.

இத்தலத்தில் அச்மஸாரன் என்ற அசுரனை பாலிகாவனத்தில் மாயாயுத்தம் செய்து அவன் காலைப்பிடித்து தரையில் மோதி, பகவான் அவன்போல் நாட்டியமாடி ஸம்ஹரித்து தேவர்கள் பிரார்த்தனைப்படி மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெற்றதாக ஐதீஹம். இவ்வூர் அர்ச்சகர் சில சமயம் தொலைவில்லிமங்கலம் பூஜைக்குப் போய்விடுவதுண்டு. அவர் இருக்கும் நேரம் தெரிந்து வேண்டும்.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3561 - 1 பாசுரம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருத்தொலைவில்லிமங்கலம்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்கோளூர் (ஆழ்வார் நவ திருப்பதி)
Next