ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருக்கோளூர் (ஆழ்வார் நவ திருப்பதி)
தென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி (ஆழ்வார் திருநகரி, மார்க்கம் 98 காண்க) வரும் வழியில் சுமார் 1 1/2 மைல் தாரத்தில் தெற்கே ஒரு கிளைப்பாதையில் திரும்பி 1 1/2 மைல் சென்று இதை அடையலாம். வசதிகள் ஒன்றுமேயில்லை.
மூலவர் - வைத்தமாநிதி பெருமாள், நிக்ஷேபவித்தன், புஜங்கசயனம், கிழக்கே திருமுக மண்டபம்.
தாயார் - குமுதவல்லி, கோளூர்வல்லி (2 தனிக்கோவில் நாச்சியார்கள்)
தீர்த்தம் - குபேர தீர்த்தம், தாமிரபரணியாறு.
விமானம் - ஸ்ரீ கர விமானம்.
ப்ரத்யக்ஷம் - குபேரன், மதுரகவி ஆழ்வார்.
விசேஷங்கள் - பார்வதியால் குபேரன் சபிக்கப்பட்டதால், நவநிதிகள் அவளைவிட்டுப் பிரிந்து இத்தலத்தில் பகவானை நாதனாக அடைய தவம் செய்து, பகவான் ப்ரத்யக்ஷமாகி, நவநிதிகளின் பிரார்த்தனைப்படி 'நிக்ஷேபவித்தன்' (வைத்தமாநிதி) என்ற திருநாமம் பூண்டு நிதிகளைக்காத்து வருவதாக ஐதீஹம். இது மதுரகவி ஆழ்வார் அவதாரஸ்தலம். குபேரனக்கு சாபவிமோசனம் ஆன ஸ்தலம். தர்மம் இந்த ஸ்தலத்திற்கு வந்து நித்யவாஸம் செய்து கொண்டு எம்பெருமானை ஸேவித்துக் கொண்டிருந்தபொழுது, அதர்மம் தர்மத்துடன் யுத்தம் செய்து, தோற்று ஓடிவிட்டதால், இத்தலத்திற்கு "அதர்ம பிசுனம்" என்ற நாமம் உண்டானதாக ஸ்தல வரலாறு.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3293-3303, 3473 - 12 பாசுரங்கள்.