ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருப்பேரை
(தென்திருப்பேரை - திருப்பொறை. ஆழ்வார் நவதிருப்பதி)
ஆழ்வார் திருநகரிலிருந்து (மார்க்கம் 98 காண்க) 3 1/2 மைல். தொலைவில்லி மங்கலத்திலிருந்தும் இந்த திவ்ய தேசத்துக்கு போகலாம். ஒரு சத்திரமும் அங்கு உணவும் உண்டு. ஆனால் தங்குவதற்கு வசதி இல்லை.
மூலவர் - மகர நெடுங்குழைக்காதன், நிகரில் முகில் வண்ணன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் - குழைக்காதுவல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் என்று இரண்டு தனிக்கோவில் நாச்சியார்கள் உண்டு.
தீர்த்தம் - சுக்ரபுஷ்கரிணி, சங்கதீர்த்தம்.
விமானம் - பத்ர விமானம்.
ப்ரத்யம் - சுக்ரன், ஈசாந்யருத்ரர், ப்ரஹ்மா.
விசேஷங்கள் - இப்பெரிய ஆலயத்தின் கைங்கர்யங்கள் நேரம் தவறாமல் ஒழுங்காக கவனிக்கப்படுகின்றன. "திருப்பேரை" என்பது ஸ்தலம் பெயர் என்று சிலர் கருதுகிறார்கள். லக்ஷ்மியின் பிரார்த்தனைப்படி, தூர்வாஸ மஹரிஷி பூமிதேவியை லக்ஷ்மியைப்போல் ஆக சபித்ததாகவும், பூதேவி தூர்வாஸர் உபதேசித்த அஷ்டக்ஷரத்தை ஜபித்துக்கொண்டு தவம் இருந்து "ஸ்ரீபேரை" (லக்ஷ்மியின் உடல்) என்னும்நாமத்தைத் தரித்து பங்குனி பூர்ணிமையில் தாம்பரபரணி தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்ய முயன்றபொழுது, மகராக்ருதியான (மீன்போல் வடிவமுள்ள) இரண்டு குண்டலங்களைக் கண்டு பகவானுக்கு ஸமர்ப்பிக்க 'மகரநெடுங்குழைக்காதன்' என்ற திருநாமம் பூண்டதாகவும், பூதேவி ஸ்ரீ பேரை நாமத்தை தரித்ததனால் இத்தலத்திற்கு 'ஸ்ரீபேரை' (திருப்பேரை) என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஐதீஹம்.
வருணன் குருவை அவமானம்செய்த பாபம் நீங்க இக் § பங்குனி பூர்ணிமையில் பகவானுக்கு திருமஞ்சனம் செய்து பாப விமோசனமடைந்ததாகவும், விதர்ப்ப தேசத்தில் அநாவ்ருஷ்டி உண்டாக அவ்வூர் அரசன் இங்கு பகவானை ஆராதித்து நாட்டில் மழை பெய்து சுபிக்ஷம் உண்டானதாக தல வரலாறு.
மங்களாசாஸனம் -
நம்மாழ்வார் - 3359-69 - 11 பாசுரங்கள்.