ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
முதற்பத்து
ஓடும்புள்
'பகவான் என்ன நினைக்கிறானோ அதையே சொல்லுவான், சொன்னதையே செய்வான்' என்று அவனது நேர்மையின் (செம்மைப் பண்பின்) சிறப்பை ஆழ்வார் ஈண்டுக் கூறுகிறார்.
வஞ்சித்துறை
கருடன்மீது அமர்ந்து செல்வான் திருமால்
2752. ஓடும் புள்ளேறி, - சூடும் தண்டுழாய்,
நீடு நின்றவை, - ஆடும் அம்மானே.
எல்லாப் பண்புகளையும் உடையவன் கண்ணன்
2753. அம்மா னாய்ப்பின்னும், - எம்மாண் புமானான்
வெம்மா வாய்கீண்ட, - செம்மா கண்ணனே.
திருவேங்கட வெற்பன் எல்லோர்க்கும் கண்
2754. கண்ணா வானென்றும், - மண்ணோர் விண்ணோர்கக் §,
தண்ணார் வேங்கட, - விண்ணோர் வெற்பனே.
எம்பெருமான் குணத்தையே சொல்லுவேன்
2755. வெற்பை யன்றெடுத்து, - ஒற்க மின்றியே,
நிற்கும் அம்மான்சீர், - கற்பன் வைகலே.
என் மெய் கலந்தவன் கண்ணன்
2756. வைக லும்வெண்ணெய், - கைக லந்துண்டான்,
பொய்க லவாது,என் - மெய்க லந்தானே.
மூவடி யளந்து நிலம் கொண்டவன் என் நாதன்
2757. கலந்தென் னாவி, - நலங்கொள் நாதன்,
புலன்னொள் மாணாய், -நிலம்கொண் டானே.
என் எண்ணத்தையே உடையவன் கண்ணன்
2758. கொண்டா னேழ்விடை, - உண்டா னேழ்வையம்,
தண்டா மஞ்செய்து,என், - எண்டா னானானே.
பகவானின் அவதாரங்களுக்கு எல்லை இல்லை
2759. ஆனா னானாயன், - மீனோ மேனமும்,
தானா னானென்னில், - தானா யசங்கே.
எங்கும் நிரம்பி இருப்பவன் திருமால்
2760. சங்கு சக்கரம், - அங்கை யில்கொண்டான்,
எங்கும் தானாய, நங்கள் நாதனே.
வேதம் கூறும் தன்மைகளை உடையவன் திருமால்
2761. நாதன் ஞாலங்கொள் - பாதன், என்னம்மான்,
ஒதம் போல்கிளர், - வேத நீரனே.
இவற்றைப் படியுங்கள்
2762. நீர்புரை வண்ணன், - சீர்சட கோபன்,
நேர்த லாயிரத்து, - ஒர்த லிவையே.
நேரிசை வெண்பா நெடுமாலின் செம்மையை மாறன் உரைத்தான்
ஓடுமனஞ் செய்கையுரை யன்றினில்லா தாருடனே,
கூடிநெடு மாலடிமை கொள்ளுநிலை, - நாடறிய
ஒர்ந்தவன்றன் செம்மை யுரைசெய்த மாறனென,
ஏய்ந்துநிற்கும் வாழ்வாம் இவை.