ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
திருவாய்மொழி
பத்தாம் பத்து
சார்வே தவநெறி
'கண்ணா c பசு நிரை மேய்க்கப் போகேல்' என்றார்கள் இடைப் பெண்கள். 'அப்படியாகில் இனி இத்தொழிலை விட்டேன்' என்றானாம் எம்பெருமான். அப்படிப்பட்ட குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் கனிவுடன் பாடியுள்ளார், தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச் செய்தல்
கலி விருத்தம்
தாமோதரன் தாள்களே தவநெறிக்குத் துணை
3700. சார்வே தவநெறிக்குத் தாமோ தரன்தாள்கள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்துடன்,
நீர்வானம் மண்ணெரிகா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெருமையனே.
செங்கண்மாலே என்னை ஆள்கின்றான்
செங்கண்மாலே என்னை ஆள்கின்றான்
3701. பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே, ஆகத் தணையாதார்க்கு, என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால், நாளும்
இருமை வினைகடிந்திங் கென்னையாள் கின்றானே.
கண்ணன் கழலிணைக் கண்டு தலைமேல் சூடினேன்
3701. பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே, ஆகத் தணையாதார்க்கு, என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால், நாளும்
இருமை வினைகடிந்திங் கென்னையாள் கின்றானே.
கண்ணன் கழலிணைக் கண்டு தலைமேல் சூடினேன்
3702. ஆள்கின்ற னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர்கடிந்தோம்,
வாள்கெண்டை யண்கண் மடப்பின்னை தன்கேள்வன்,
தாள்கண்டு கொண்டேன் தலைமேல் புனைந்தேனே.
என் மனத்துள் இருந்தான் எம்பெருமான்
3703. தலைமேல் புனைந்தேன் சரணங்கள், ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க,
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை,
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.
என்னால் விரும்பப்படுபவன் சக்கரபாணி
3704. நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை,
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்,
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்,
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.
ஞானத்தால் சேர்வார்க்கு அருள் செய்பவன் பாம்பணையான்
3705. நாகத் தணையானை நாடோறும் ஞானத்தால்,
ஆகத் தணைப்பார்க் கருள்செய்யும் அம்மானை,
மாகத் திளமதியம் சேரும் சடையானை,
பாகத்து வைத்தான்றன் பாதம் பணிந்தேனே.
மனமே!ஆழியானைப் பணிந்திடு
3706. பணிநெஞ்சே நாளும் பரம பரமபரனை,
மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்,
சொற்றோடியந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.
நேரிசை வெண்பா
மாறன் திருவடிகளைக் கண்டு என் கண் களிக்கும்
சார்வாக வேயடியிற் றானுரைத்த பத்திதான்,
சீரார் பலத்துடனே சேர்ந்ததனைச்.- சோராமல்
கண்டுரைத்த மாறன் கழலிணையே நாடோறும்,
கண்டுகக்கு மென்னுடைய கண்.