காலத்தைப் பொறுத்து நியமம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பதார்த்த சுத்தியில் இன்னொரு விஷயம். காலத்தைப் பொருத்து ஸாத்விக பதார்த்தங்களில் சிலதையே சில காலங்களில் தள்ளச் சொல்லி விதித்திருக்கிறது. பால், தயிர் இரண்டும் ஸாத்விகம்தான். ஆனாலும் ராத்திரி வேளையில் தயிர் போட்டுக் கொள்ளக்கூடாது; மோராகப் பண்ணிச் சேர்த்துக் கொள்ளலாம். மத்யான்னத்தில் வெறும் பால் சாப்பிடக்கூடாது.

மற்ற நாட்களில், சேர்த்துக்கொள்ளும் அநேக பதார்த்தங்களை, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெண்டைக்காய், பூசணிக்காய் போன்ற தப்பில்லாத வஸ்துக்களையே சிராத்த போஜனத்தில் தள்ளுபடியாக வைத்திருக்கிறது. அன்று பாகற்காயிலேயே நீளப் பாகல்தான் சேர்க்கலாமே தவிர மிதி பாகல் உதவாது.

இப்படியே சாதுர்மாஸ்யத்துக்கென்று சில போஜன நியமங்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அளவு முக்கியம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சாதுர்மாஸ்யமும் அதில் போஜன விதியும்
Next