நிவேதனம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பகவானுக்குக் காட்டிவிட்டுச் சாப்பிட வேண்டுமென்பது முக்கியம். வேறே பூஜை என்று பெரிசாகப் பண்ணாவிட்டாலும், நமக்குக் கையைக் கொடுத்து, அந்தக் கையாலேயே சமைத்துக் கொள்ளணும் என்ற புத்தியைக் கொடுத்து ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்ள வைத்தவனுக்கு அதைக் காட்டி, நிவேதனமாக்கி அதில் இருக்கக் கூடிய கொஞ்ச நஞ்சம் தோஷத்தையும் போக்கிவிட வேண்டும்.

தெலுங்கு தேசத்தில் ஆயிரம் பேர் ஸமாராதனை என்று உட்கார்ந்தாலும், ப்ராணாஹுதி பண்ணுவதற்கு முன்னாடி ஒவ்வொருத்தனும் இஷ்ட தெய்வத்தை நினைத்து ஸ்வாமி நைவேத்யம் பண்ணித்தான் சாப்பிடுவான்.

வேறே மூர்த்தி, விக்ரஹம் இல்லாவிட்டாலும் பிரத்யக்ஷ பகவானாயிருக்கிற ஸூர்யனுக்காவது நைவேத்தியம் செய்யணும்.

அம்மா சமைக்கிறாள், ஸம்ஸாரம் சமைக்கிறாள் என்பதால் [புருஷர்கள் சமைக்கத்] தெரிந்து கொள்ளாமலிருந்தால் அப்புறம் எங்கேயாவது தனியாக வெளியே போய் இருக்கும்போது, அல்லது வீட்டிலேயே அவர்களுக்கு அஸந்தர்ப்பமாகிறபோது, கண்டதைத் தின்பதான கெட்ட பழக்கம் வந்துவிடுகிறது. ஸ்வயம்பாகம் தெரிந்து, தானே பண்ணிக் கொள்வது என்று கொஞ்சநாள் பழகி விட்டால் அப்புறம் பிறத்தியார் சாப்பாடு பிடிக்கவே பிடிக்காது. கெடுதலான சாப்பாட்டுக் கிட்டேயே போகத் தோன்றாது. நாமே பண்ணிச் சாப்பிடுவதில் ஒரு pride-ஏ [பெருமிதமே] உண்டாகிவிடும். இப்போது நாக்கு எப்படி கண்டதற்குப் பறக்கிறதோ, அத்தனைக்கத்தனை ஸத்வ பதார்த்தங்களைத் தவிர மற்றதை நினைக்கவே நினைக்காது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is விருந்துபசாரம் எப்படி?
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஸாரமான பலன்கள்
Next