மதமாற்றம் இருக்கும்வரை தாய் மதத்திற்கு மாற்ற அநுமதி

மதமாற்றம் இருக்கும்வரை தாய்மதத்திற்கு மாற்ற அநுமதி

சட்டம் இயற்றிவிடுவதால் மட்டுமே எந்தக் குற்றமும் நிகழாமல் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை. எல்லா நாடுகளிலும் எல்லாக் குற்றங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன. அவ்வாறு சுய விருப்பமொன்றின் மீது மட்டுமேயில்லாத மதமாற்றக் குற்றங்களும் நடைபெறுமாயின், அவை நடைபெறும் வரையில் அவற்றுக்கு எதிர் நடவடிக்கையாகத் தாய் மதத்திற்கே மீண்டும் மதம் மாற்றுவதைக் குற்றமாகக் கருதாமல் அரசாங்கம் அநுமதிக்க வேண்டும்.

சுய விருப்பத்தின் மீது எந்த ஒரு பிரஜையின் எந்த ஒரு மதத்தையும் தழுவியிருக்கச் சுதந்திர உரிமையைச் சட்டபூர்வமாக ஓர் அரசாங்கம் அளிக்கும்போது, கையோடு கையாக, அச்சுதந்திரத்திற்கு ஊறு பயப்பதான மத மாற்றத்தைச் சட்டப்பூர்வமாகத் தடுப்பதில் தனக்குள்ள பொறுப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதாலேயே, இவ்விஷயம் அதற்குரிய முக்கியமான கவனத்தைப் பெறாமலிருந்துவிடக் கூடாதெனக் கருதி ஒரு மதத்தின் தலைமைப் பீடங்களில் ஒன்றில் இருப்பவரின் கடமையாக இவ்வளவு விரித்துக் கூறினோம்.

இதனால், எல்லா மதங்களுக்குமே சுதந்திர பாரத அரசாங்கம் ஒருபோன்ற ஆதரவளிக்க வேண்டும் என்ற கொள்கையை நாம் ஆட்சேபிப்பதாக அர்த்தமாகாது. உரிய முறையில் அவ்வாதரவு நல்கப்படுவதை வரவேற்கவும் வலியுறுத்துவுமே செய்கிறோம். அந்த 'உரிய முறை'யையே நமது ஆலோசனைக்கு எட்டியபடி விளக்கினோம்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மதத் தொடர்பில்லாத உபாயங்கள்;கடும் தண்டனை விதித்தல் வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  இந்தியாவின் உயிர்நிலையே மதமும் ஆன்மிகமும்தான்
Next